நாடு முழுவதும் 1,240 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டில், இப் பள்ளிகளில் இருந்த 1 லட்சம் இடங்களுக்கு, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே மாணவர்களுக்கு ஆராய்வு சிந்தனைகள், மும்மொழிக் கல்வியுடன் இலவசமாக இங்கு கற்பிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த பள்ளிகள் வேண்டி அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு எப்போதுமில்லாத வகையில் 1200 கும் மேற்பட்ட பள்ளிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஒவ்வொரு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஓன்று என்ற அளவில் இப்பள்ளிகளை திறக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில், கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம், மதுரை மாவட்டம் இடையபட்டி, சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் தமிழகத்தில் இந்த பள்ளிகள் கொண்டு வருவதில் ஹிந்தியை காரணமாகக் கூறி திமுக உள்ளிட்ட சுயநல சக்திகள் கெடுத்து வந்தன.

இந்த ஆண்டு ஊராட்சி ஒன்றிய அளவில் ஒரு பள்ளி என்ற திட்டப்படி 200 க்கும் மேற்பட்ட பள்ளிகளை உத்தரகாண்ட் மாநிலம் அமைத்து வருகிறது. அனால் இங்குள்ள தமிழக அரசும் மும்மொழி திட்டத்துக்கு ஆதரவாக இல்லாததால் ஒன்றிய அளவில் ஒரு பள்ளி என்ற என்ற திட்டம் தமிழகத்தில் செயல்டுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் ஒடிசா மாவட்டத்தில் இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ராஜஸ்தானில் ஒரு பள்ளி மற்றும் ஹரியாணாவில் ஃபரிதாபாத் மாவட்டத்தில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகியவற்றின் கட்டிடங்களுக்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். காணொலி முறையில் நான்கு கட்டிடங்களையும் ஒரே நேரத்தில் அமைச்சர் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஃபரிதாபாத் அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் பொக்ரியால், ”கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசத்தின் பெருமிதம். இந்தப் பள்ளிகள் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் நன்னெறிகளையும் வழங்குகின்றன. ஆனால் இதன் அருமை தெரியாமல் சில மாநிலங்களில் சிலர் கடந்த காலத்தில் புறக்கணித்து தவறு செய்து விட்டனர் என்றார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கத் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2003-04 ஆம் ஆண்டில் இருந்து கேந்திரிய வித்யாலயா பள்ளி வேண்டும் என்று கேட்ட ஃபரிதாபாத் மக்களுக்காக, இந்த பள்ளிக் கட்டிடம் அர்ப்பணிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.