இந்தியா- சீனா இடையே லடாக்கில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில் ‘தி இந்து’ நாளிதழுக்கு சீனாவிலிருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்று விசாரிக்க Legal Rights Observatory உள்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீனா அதன் தந்திரங்களுக்கு பெயர் பெற்றது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியினை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் எழுத்தாளர் கிளைவ் ஹாமில்டன் அம்பலப்படுத்தியதைப் போல LRO உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

சீனா இந்த தந்திர செயலை ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் United Front Works Department (UFWD) and Confucius Institute ஆகியவற்றில் தனது உளவாளிகளை‌ப் பணியமர்த்தி அவர்கள் மூலம் செல்வாக்கு செலுத்தியது போல் தற்போது தி இந்து நாளிதழ் மூலம் இந்தியாவில் சீனா தனது கருத்துக்களைப் பரப்ப முயற்சி செய்து வருகிறது என்று LRO உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

எல்லையில் இந்தியாவிற்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ள இந்த சூழ்நிலையிலும் இந்து நாளிதழ் சீனாவின் தேசிய தினத்தன்று சீனாவின் சாதனைகள் பற்றிய ஒரு முழுப் பக்கக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் சீனாவில் இருந்து இந்திய பத்திரிக்கைகள் சிலவற்றிற்கு தங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிடுவதற்காக சீனா நிதி கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக இது போன்று நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி அளித்து சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக சீனாவைப் பற்றி நேர்மறையான செய்திகளை வெளியிடுவதற்கு முயற்சி செய்து வருவது சில நாளிதழ்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட தி இந்து பத்திரிகைக்கு ஏதேனும் நிதி அனுப்பப்பட்டு இருக்கின்றதா என்று வருமான வரித்துறைக்கும் அமலாக்கத் துறைக்கும் உத்தரவிடுமாறு LRO உள்துறை அமைச்சக்த்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இடையே நடக்கும் எல்லை பிரச்சினை நடந்து வரும் நிலையில் சீனாவின் சாதனைகளை வெளியிடுமாறு தி இந்து நாளிதழின் உரிமையாளர்கள், இயக்குனர் மற்றும் எடிட்டர் ஆகியோருக்கும் சீனாவுக்கும் இடையே ஏதேனும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்று விசாரிக்குமாறு கோரியுள்ள LRO.

சீன நிதி இந்தியாவில் வெள்ளமெனப் பாய்ந்து அதன் பொய்கள் மற்றும் பிரச்சாரத்தை பெரிதுபடுத்தி உண்மையான செய்தியாக வெளியிட பத்திரிகைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அதிக அளவில் நிதி கொடுக்கப்பட்டு வருவதாகவும் இது வெளிப்படையாகவே தேச துரோகத்தின் ஈடுபடும் செயல் எனவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீன கம்யூனிஸ்ட் கட்சி UFWD மூலம் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை விலைக்கு வாங்கி மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு முயற்சி செய்வதை சுட்டிக்காட்டி இது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதால் இதுபற்றி தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று LRO அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, உளவுத்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு விசாரணை செய்து சீனாவிலிருந்து

தி இந்து மற்றும் பிற ஊடக நிறுவனங்களுக்கு நடந்திருக்கும் பணப்பரிமாற்றம் குறித்து கண்டறிந்து அம்பலப்படுத்துமாறு LRO உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. சமீபத்தில் ராஜீவ் சர்மா என்ற ஒரு பத்திரிகையாளர் சீனர்களுக்காக உளவு பார்த்தார் என்பதை இங்கே நினைவுகூர வேண்டும். இந்த முக்கியமான கால கட்டத்தில் தி இந்து போன்ற பெரிய ஊடக நிறுவனங்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நாட்டிற்கும் இறையாண்மைக்கும் நன்மை பயக்கும்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.