இப்போது விளம்பர மோகத்தில் அதிகம் பித்து பிடித்து அலைவது தமிழக அரசியலில் தி.மு.க மட்டுமே, மக்களிடத்தில் பெரிதாக நல்ல பெயர் இல்லை என்றாலும் எப்படியாவது விளம்பரடுத்தியாவது அந்த நல்ல பெயரை எடுத்துவிட வேண்டும் என தி.மு.க’வினர் துடித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களின் முன்வினை அவர்கள் செய்யும் விளம்பரம் கூட அவர்களுக்கு வினையாக முடிகிறது. இது அவர்களுக்கு முடிந்தால் மட்டுமல்ல பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுவதுதான் மிகவும் ஆபத்து. அந்த வகையில் கனிமொழியை வரவேற்க விளம்பர மோகத்தின் உச்சத்தில் தி.மு.க உடன்பிறப்புகள் பட்டாசு வெடித்ததில் ஏழையின் குடிசை தீப்பற்றியது.

தூத்துக்குடியில் தி.மு.க எம்.பி கனிமொழி, இன்று சாயர்புரம் அருகே தங்கம்மாள்புரத்தில் மேல்நிலை குடிநீர்தொட்டிக்கான அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார்.

அப்போது தி.மு.க’வினர் அதை ஏதோ பெரிய நிகழ்வு மாதிரி விளம்பரபடுத்த அவரை வரவேற்று பட்டாசு வெடித்தனர். பட்டாசு வெடித்ததில் இருந்து தீ பரவி வெள்ளச்சாமி என்பவரின் குடிசை தீப்பற்றிக்கொண்டது.

ஏழையான வெள்ளச்சாமி பந்தல் போடும் உபகரணங்கள் வைத்திருந்த குடிசை தீப்பற்றியது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாயர்புரம் போலீசார் விதிமுறைகளை மீறி கூட்டம் சேர்த்ததாக அங்கிருந்த தி.மு.க’வினரை கைது செய்தனர்.

விளம்பர மோகம் தி.மு.க’வை எப்படி எல்லாம் ஆட்டி வைக்கிறது, பதவியில் இல்லாத போதே இப்படி என்றால் பதவிக்கு வந்தால் இன்னும் என்னவாகுமோ என அந்த பகுதி மக்கள் பயந்துள்ளனர்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.