ஸ்ரீரங்கத்தில் 10.02.2021 இல் நடந்த ‘விசுவ இந்து பரிஷத் – தமிழ்நாடு’ மாநில பொதுக்குழு கூட்டத்தில், மாநில தலைவர் ஆர்ஆர். கோபால்ஜி தீர்மானங்களை வாசித்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- கிராமக்கோயில் பூஜாரிகளின் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாகவும், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தியதற்காகவும், கரோனா ஊரடங்கின் போது நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கியதற்காகவும், தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்காகவும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது.
- சிறுபான்மையினரின் ஓட்டுக்காக இந்துக்களின் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் தரம் தாழ்த்திப்பேசும் அரசியல்வாதிகளையும், அவரது கட்சிகளையும் இந்து சமுதாயம் இனம் கண்டு புறந்தள்ள வேண்டும்.
- மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதம் உலக அளவில் பெருகி வருகிறது. தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையின்போது, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.
- சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்வதை வன்மையாக கண்டிப்பது. ஏழை இந்துக்களை அவர்களின் வறுமையை பயன்படுத்தி, மதமாற்றம் செய்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மதமாற்றம் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
- ஆலயங்களையும் அவற்றின் சொத்துக்களையும் முறையாக பராமரிக்கவும், பக்தர்களின் நிம்மதியாக வழிபாடு செய்யவும், பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்கள், கால்நடைகள் முறையாக பராமரிக்கவும், பக்தர்கள் வழங்கும் காணிக்கை நிதி முறையாக இந்து ஆன்மிக, பாரம்பரியம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பயன்படவும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, இந்து சமய ஆச்சாரியார்கள், மடாதிபதிகள், ஆன்மிக தலைவர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள் அடங்கிய சுய அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சி மன்றத்தை அமைக்க வேண்டும்.
/பூரண மதுவிலக்கு/ - தமிழகத்தில் பூரணமதுவிலக்கு கொண்டு வந்து அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்.
- இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்தியத் தயாரிப்பு பொருட்களும் இந்திய நிறுவனங்களும் இஸ்லாமிய சட்டப்படி, ஹலால் சான்றிதழ் பெற்றால்தான் தொழில் நடத்த முடியும் என்ற நெருக்கடியை சில முஸ்லிம்அமைப்புகள் ஏற்படுத்துவதை வன்மையாக கண்டிப்பது.
- டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் தீவிரவாதிகளும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் ஊடுருவி குடியரசு தினத்தில் வன்முறையை கையில் எடுத்து கொண்டு செயல்படும் விதம் உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது. இதற்கு காரணமான தீவிரவாதிகளையும், பிரிவினை வாதிகளையும் மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.