“இந்து மக்களுக்கு துணை நிற்போம்..

கடவுளை எதிர்ப்பவனை கபலிகரம் செய்வோம்… நாங்கள்தான் தேச பக்தர்கள்!

என்றெல்லாம் பேசிக்கொண்டு,

சமூக வலை தளங்களில் தொடர்ந்து பாஜகவை தூக்கி பிடித்துக் கொண்டு,

தனது கொள்கையில் இருந்து எப்போதும் பின் வாங்காமல் இருக்கும் அன்பு சங்கி நண்பர்களே…

நீங்கள் செய்வதைத்தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து களத்திலே நின்று திரு.அர்ஜுன் சம்பத் அவர்கள் இந்து மதத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்!

ஏன் இதுவரை பாஜக மேலிடமோ
தமிழக பாஜக – அதிமுகவை சார்ந்தவர்களோ, தொலைக்காட்சி விவாதம், சமூக வலைதளத்தில் புயலென சுழன்று கொண்டிருக்கும் இந்து மத ஆதரவாளர்களோ, எவரும் இவரை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை!

நீங்கள் பூசும் அதே குங்குமத்தையும் அதே விபூதியையும் தானே அவரும் பூசுகிறார், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இந்து மதத்திற்காக இந்து மக்களுக்காக பரப்புரை செய்கிறார்? பல சமூக வலைதள விவாதங்களில் சூளுறைக்கிரார்!

மத்திய பாஜக அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும், இது மக்களுக்கு ஏற்றதா இல்லையா என்பதை கூட பாராமல் அவர் தொடர்ந்து தன் ஆதரவை ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகிறார்! எங்கும் எதற்காகவும் யாருக்காகவும் தனது கொள்கையில் இருந்து அவர் பின்வாங்கியது கிடையாது!… அப்படி இருக்க?

அவர் முன்னெடுத்து நடத்தி வரும் இந்து மக்கள் கட்சியை ஏன் இதுவரை தமிழக அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை?..

காரணம் புரியவில்லை!

எதனால் அவருக்கு மட்டும் ஓர் அங்கீகாரம் இல்லாமல் போனது இந்த கட்சிகளிடம் இருந்து?

தன் வாழ்நாளில் முழு நேரமும் இந்து மதம், இந்துக்கள் என்று தொடர்ந்து போராடிவரும், குரல் கொடுக்கும் இந்த அர்ஜுன் சம்பத் என்ற மனிதருக்கு நீங்கள் எந்த வகையில்தான் முன்னுரிமை அளிக்கப்போகிறீர்கள்?

பாழாய்ப்போன இந்த அரசியலில்?

பார்ப்போம்.”

என இந்து மக்கள் கட்சிக்கு ஆதரவாக திரு. Vishwa Hbk அவர்களின் பதிவு சமூக வலைதங்களில் பரவலாக பகிரப்பட்டு தமிழக ஹிந்துக்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.