விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மையார். அன்றைய காலகட்டங்களில் காமராஜர் பொது கூட்டங்களில் அதிகமாக கலந்துகொண்டார். அதுவே பிற்காலத்தில் அவரை சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. தந்தை மறைவிற்கு பின்னர் காமராஜர் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சிறிது காலம் துணிக்கடையிலும், மரக் கடையில் வேலை பார்த்தார். ஆனால் அவருடைய எண்ணம் எல்லாம் நாட்டின் விடுதலையை நோக்கிய இருந்தது. கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பஸ் காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனையும் அனுபவித்தார். காமராஜர் சத்தியமூர்த்தி தொண்டனாகி காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேர தொண்டு செய்தார்.

1954 ஆம் ஆண்டு காமராஜர் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். அதிகம் படிக்காத காமராஜர் ஆட்சிக்கு வந்தபிறகு கல்விக்காக செய்த சாதனைகள் பல அவற்றுள் எல்லோருக்கும் இலவசக் கல்வி,பட்டி தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள், இலவச மதிய உணவு, சீருடைகள் மற்றும் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். கிராமங்கள்தோறும் பள்ளிகள் திறக்கச் செய்தார்.

கல்வி மட்டும் போதுமா? என்ற கேள்வியை அடுத்து நாட்டின் பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் எப்படி நீக்க முடியும்? என்பதை யோசித்தார். பிறகு புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த தலைவர்களுள் காமராஜரும் ஒருவர்.

காமராஜர் கல்வி திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தவர் அன்னாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு. சுந்தர வடிவேலு.மேலும் தொழில் திட்டங்களை நிறைவேற்ற காரணகர்த்தாவாக இருந்த திரு .ஆர். வெங்கட்ராமன் ஆவார். ஒன்பது ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக இருந்தார். பெருந்தலைவரின் ஆட்சிக் காலத்தில் ‘தமிழ்நாட்டின் பொற்காலம்’ என்று அழைப்பார்கள். அவரது நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.