ஹரியானாவைச் சேர்ந்த 35 நபர்கள் உள்ளடக்கிய 6 முஸ்லீம் குடும்பங்கள் திரும்பவும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர். ஹரியானா தம்தான் ஷைப் கிராமத்தைச் சேர்ந்த 35 உறுப்பினர்களும் ‘கர் வாப்சி’ செய்து தங்கள் முன்னோர்களின் மதத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

அமர் உஜாலா தெரிவித்துள்ள அறிக்கையில், இந்த கிராம மக்களின் முன்னோர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சில காரணங்களால் முன்னோர்களுக்கு முஸ்லீம் மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர்களது வாழ்க்கை நடைமுறையிலும் முக்கிய நிகழ்வுகளிலும் இந்து சடங்குகளைப் பெருப்பாலும் பின்பற்றினர். இறுதியாக அவர்கள் இந்து மதத்திற்கு மாறும் முடிவிற்கு வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று ‘கர் வாப்சில்’ ஹரியானா தனோடா கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் மக்கள் இந்து மதத்திற்கு மாறியதை அவர் குறிப்பிட்டார்.

இந்த குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறுவதற்காகக் கிராமத்தில் யாகம் மற்றும் ஹவான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த குடும்பங்களைச் சேர்ந்த 35 உறுப்பினர்களும் யாகத்தில் பங்குபெற்று இந்து சமயத்தின் புனிதமான பூணூலை அணிந்து கொண்டனர். தல்ஜீத், ராஜேஷ், சாதிக், ஜங்கா, சத்வீர் மற்றவர்களும் அவர்கள் எந்தவித கட்டாயமும் இன்றி சொந்த விருப்பத்தின் பேரில் இந்து மதத்திற்குத் திரும்பியதாகத் தெரிவித்தனர். அவர்களது வாழ்க்கை நடைமுறையில் இந்து சடங்குகளையும் இந்து பெயர்களையும் பின்பற்றி வந்தாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களது வாழ்க்கையில் இந்து மற்றும் முஸ்லீம் முறைகள் கலந்திருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் தீபாவளி, நவராத்திரி மற்றும் ஹோலி பண்டிகைகளையும் கொண்டாடி வந்துள்ளனர். முஸ்லீம் சங்குகளின் முக்கியமானதாக இறந்தவர்களை அடக்கம் செய்வதை அவர்கள் பின்பற்றினர் என்றும் கூறினர். இதன் பின்பு அதிலும் இந்து சடங்குகளைப் பின்பற்றுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவு தனது கவனத்திற்கு வரவில்லை என்று ADM நர்வனா சஞ்சய் பிஷ்னோய் அமர் உஜாலாவிடம் கூறினார். இருப்பினும், குடும்பங்களுக்கு அவர்களின் விருப்பங்களின் பேரில் மதம் மாற முழு சுதந்திரம் உள்ளது, மேலும் அவர்கள் சொந்த விருப்பங்களின் பேரில் எந்த கட்டாயமும் இன்றி மாறியுள்ளனர் என்று அவர் வலியுறுத்தினார்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.