அன்று காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தை தொடங்கி சசிகலா தமிழக எல்லையை வந்தடைந்தார். தாரை தப்பட்டையுடன் சசிகலாவின் ஆதரவாளர்கள் பெரும் திரளாக கூடி அமோக வரவேற்பளித்தனர்.

இதை அறிந்த ஸ்டாலின், சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரியை உறுதி செய்துவிட்டார். உடனடியாக மிட்டாயை பார்த்த குழந்தையை போல அன்று திமுக பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,

“பெங்களூரிலிருந்து ஒருவர் கிளம்பிவிட்டார். இனி நடக்கவேண்டியவை நடக்கும்”. என அருள் வாக்கு கூற தொடங்கினார்.

சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம் தென்மாவட்டங்களில் சமுதாய வாக்குகள் பெரும்பாலும் தினகரன், சசிகலாவுக்கு வந்து சேரும். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அடிவாங்கும் தற்சமயம் எடப்பாடி பழனி சாமிக்கு தென் மண்டலத்தின் செல்வாக்கும் சரிந்துவிடும் என்ற ஸ்டாலினின் கனவை,

“நான் அரசியலை விட்டு விலகுகிறேன்”என்று ஒரே வரியில் சுக்குநூறாக்கிவிட்டார் திருமதி. சசிகலா.

பெருந்தலைவர் காமராஜரையும், இந்திரா காந்தியும் மிக கொச்சையாக கேவலப்படிய திமுகவிடம் மண்டியிட்டு ‘சீட்டு தாருங்கள்’ என்ற நிலையில் இருக்கும் காங்கிரஸ், கமலஹாசன் பக்கம் சாய்ந்துவிட்டால் திமுக இந்த தேர்தலில் மீளவே முடியாத படுதோல்வியை சந்திக்கும்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.