உலக அரங்கில் இந்தியா மாபெரும் சாதனையினை செய்து தன்னை மிகபெரிய சக்தியாக நிலைநிறுத்தி வியக்க வைத்திருக்கின்றது

எல்லா நாடுகளும் இன்று இந்தியாவினை மரியாதையாகவும் கம்பீரமாகவும் பார்த்து வணங்குகின்றன, நிச்சயம் அந்த தலைவன் மோடி இனி இந்தியாவின் நிரந்தர அதிபர் எனும் அளவில் அவை வாய்விட்டு பாராட்டி கொண்டிருக்கின்றன‌

ஆம், கொரோனா காலம் என்பது மாபெரும் பொருளாதார வல்லரசுகளையே கவிழ்த்து ஏகபட்ட நாடுகளை புரட்டி போட்டு முதுகில் குத்தும்பொழுது இந்தியா அதன்போக்கில் தனித்து நிற்கின்றது

2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடுகளே விழிபிதுங்கி நிற்கும் பொழுது சுமார் 120 கோடி மக்களை கொண்ட தேசம் சிலிர்த்து எழும்பி நிற்கின்றது

உலகுக்கே நமபகமான மருந்து என கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரு மருந்துகளை அறிமுகபடுத்திய இந்தியா இன்னும் இரு மருந்துகளை பரிசீலனையில் வைத்திருக்கின்றது. இதில் கோவாக்சின் என்பது முழு இந்திய தயாரிப்பு என்பதால் பிரதமர் மோடி அதை தனக்கு செலுத்தி கொண்டார்.

இப்பொழுது நாடெங்கும் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கபடும் பணி தொடங்கிற்று

உலக அரங்கில் 120 கோடி மக்கள் கொண்ட நாடு தன் குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல‌ மாபெரும் சாதனையிலும் அதி உச்சபட்ச சாதனை. ஐரோப்பிய யூனியனோ , அமெரிக்காவோ, சீனாவோ, ரஷ்யாவோ நெருங்க கூட முடியாத சாதனை.

மோடியின் அரசு இந்தியருக்கான அரசு, இதோ இந்தியரை காத்து கொண்டிருக்கின்றது. கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்து அதை உலகுக்கும் இந்தியாவுக்கும் மோடி கொடுத்து கொண்டிருக்கும் பொழுது அவரின் அரசியல் எதிரிகலெல்லாம் சத்தமே இல்லை.

ராகுல், ஸ்டாலின், மம்தா, கம்யூனிஸ்டுகள்,இஸ்லாமிய கட்சிகள் என யாரும் மூச்சே இல்லை. ராகுல் நினைத்தால் அவரும் தடுப்பூசி செலுத்தி மக்களிடம் விழிப்பினை கொண்டுவரலாம் ஆனால் அவரோ கல்லூரி மாணவிகளுடன் ஆடிகொண்டிருக்கின்றார்.

முக ஸ்டாலின் அப்படி ஒரு மருந்து வந்ததையே மறந்துவிட்டார் மம்தாவுக்கு அந்த மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசையே இல்லை. மோடி தன் கடமையினை சரியாக செய்திருக்கின்றார், அம்மருந்து இந்தியருக்கானது மாறாக பாஜகவினருகானதோ இந்துக்களுக்கானதோ அல்ல‌.

இந்தியராய் இருக்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், கிறிஸ்தவ, இஸ்லாமிய கோஷ்டி என எல்லோருக்குமானது. பாகிஸ்தானை விரட்டும் பொழுது இந்தியருக்காய் விரட்டி , சீனாவினை முடக்கும் பொழுது இந்தியருக்காய் முடக்கிய மோடி இப்பொழுதும் இந்தியருக்கே மருந்து கொடுத்திருக்கின்றார்

கவனியுங்கள், இந்த மருந்து பல டிரில்லியன் டாலர் காசினை கொடுக்கும் மருந்து, உலகில் ஒவ்வொரு பணக்காரனும் தன் கையில் கிடைக்காதா என ஏங்கும் மருந்து. ஆனால் அம்மருந்தை இங்கு அதானி, அம்பானி இன்னும் மருந்து கம்பெனி கைகளில் மோடி அரசு கொடுக்கவில்லை கொடுத்தால் மக்களுக்கு எட்டா விலைக்கு விற்பார்கள் என தெரியும். இதனால் அரசே ஒவ்வொரு இந்தியனும் தடுப்பூசி பெரும் வகையில் வழிவகை செய்திருக்கின்றது.

மோடி அரசு இந்த மாபெரும் சாதனையினை செய்யாவிட்டால் பைசர் முதல் பல நாட்டு கம்பெனிகளிடம் நாம் கையேந்தியிருக்க வேண்டும். 120 கோடி மக்களுக்குமான மருந்தின் விலையினை கணக்கிட்டு பாருங்கள் அடுத்த 20 ஆண்டுக்கு இந்தியா எழும்பியிரமுடியாதபடி பொருளாதார அடி விழுந்திருக்கும்.
அதை தவிர்த்து நாட்டின் பொருளாதாரம், மக்கள் நலன், கூடுதலாக நட்பு நாடுகளுக்கு உதவி என அசத்தியிருகின்றது இந்த அரசு.சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் முதல் உலகப்போரில் பிரிட்டன் தான் ஹீரோ, இரண்டாம் உலகபோரில் ஐசன்ஹோவரும் சர்ச்சிலும்தான் ஹீரோ

கொரொனா போரில் நாயகன் “மோடி”தான் ஹீரோ

ஆம் நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டி நாட்டின் பொருளாதாரத்தை காத்து, இப்பொழுது மருந்துக்கு எந்த நாட்டிடமும் கையேந்தி பெரும் பணம் இழக்காமல் நம் நாட்டு மருந்தை நாட்டு மக்களுக்கும் அப்படியே உலகுக்கும் வழங்கி காத்து கொண்டிருக்கும் மோடி உலக ஹீரோ எனும் நிலைக்கு சென்றுவிட்டார்

சந்தேகமே இல்லை சில நாடுகளில் அவர் தேர்தலில் நின்றால் கூட வெற்றிபெறும் அளவு பெரும் ஆதரவு கிட்டியிருகின்றது, அந்த அளவு உலகின் சக்தி வாய்ந்த தலைவரகிவிட்டார் நாயகன்

இந்திய அரசு ஒவ்வொரு இந்தியனையும் தடுப்பூசி போட்டு கொள்ள அழைக்கின்றது, இந்தியர்கள் அதை செய்தல் வேண்டும்.அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவில் கொரோனா ஒழிந்து அந்நிய முதலீடும் தொழிலும் தொழில் வாய்ப்பும் கூடும், ஏன் மருந்து பெருவதற்கென்றே பல நாட்டு மக்கள் வரும்பொழுது அரசுக்கு வருமானம் செழிக்கும்.

வெளிநாட்டு இந்தியர்கள் இம்மருந்தை பெறுவதில் சிரமம் உண்டு, பல நாட்டு எல்லைகள் இன்னும் திறக்கபடவில்லை , இந்திய தூதரகத்தில் மருந்து வழங்குவதெல்லாம் சாத்தியமில்லை. ஒவ்வொரு இந்தியனும் இம்மருந்தை பெற வேண்டும் என அரசு அழைத்து விடுத்து கொண்டிருப்பது இந்தியாவின் மாபெரும் சாதனை தருணங்கள் , பொன்னான காலங்கள், உருக வைக்கும் காட்சிகள்.

கடந்த மார்ச் 28ம் தேதி கொரோனாவினை ஒழிப்போம் என விளக்கு ஏற்றினார் மோடி. இந்தவருடம் கொரோனாவினை அதே நாளில் ஒழித்து கொண்டிருகின்றோம் என விளக்கு ஏற்ற, வெற்றி ஜோதி ஏற்ற தயாராகின்றது தேசம்

பாரதம் தன் பொற்காலங்களில் கால்பதித்துவிட்டது , தேசத்து நாயகன் மோடிக்கு வாழ்த்துக்கள்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்..

By
Stanley Rajan

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.