இந்த தலைமுறையில் ஊழலுக்கு அப்பாற்பட்டு , மிக மிக எளிமையாக வாழ்ந்தவர்கள் மிக மிக சிலர்
காமராஜர், சாஸ்திரி, வாஜ்பாய், கலாம் வரிசையில் வாழ்ந்தவர் அவர்
மனோகர் பாரிக்கர், இந்தியாவில் பல சீர்த்திருத்தங்களுக்கு காரணமானவர்
எந்த முதல்வருக்கும் இல்லா சிறப்பு அவருக்கு உண்டு, ஐஐடியில் படித்து பட்டம்பெற்று முதல்வரான முதல் நபர் அவர்தான்
அவரும் இன்போசிஸ் நிலக்கேணியும் வகுப்பு தோழர்கள்
பாரிக்கர் மிகபெரும் பட்டம் வைத்திருந்தார், நினைத்திருந்தால் உலகின் எந்த மூலைக்கும் கோடிகளில் கொட்டபடும் சம்பளத்திற்கு சென்றிருக்கலாம்
ஆனால் செல்லவில்லை, தேசபற்று அவரை கட்டி போட்டது
கோவா முதல்வராக சிலமுறை இருந்தார், பாஜக அரசின் பாதுகாப்புதுறை அமைச்சரானார்
நிச்சயம் ராணுவ அமைச்சராக இருந்து அவர் பல நல்ல விஷயங்களை செய்ததை மறுக்க முடியாது, ராணுவம் முழு பலம் பெற மிக மிக கடுமையாக உழைத்தார்
அவர் காலத்தில்தான் காங்கிரஸின் புரையோடி போன அகஸ்டா ஊழல் வெளிவந்தது, மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய ராணுவ சாதனங்கள் இந்தியாவில் தயாரிக்கபடும் என சொன்னவர் அவரே
அவரால்தான் இன்று இந்தியாவில் ஆயுத பாகங்கள் செய்யபட்டு அந்நியநாட்டுக்கு செலுத்தபடும் பணம் இங்கே சுழலவிடபடுகின்றது
2025ல் இந்தியா ஆயுத ஏற்றுமதி நாடாகும் கனவினை அவர்தான் தொடங்கி வைத்தார்.
மோடி அரசில் இருந்த மிகபெரும் அடையாளம் இந்த பாரிக்கர்
பிரமோத் மகாஜனின் மறைவினை போலவே பாரிக்கரின் மறைவும் பாஜகவுக்கு மிகபெரும் இழப்பு, அவர்களின் ஆன்மா கட்சிக்கும் நாட்டுக்கும் வழிகாட்டிகொண்டே இருக்கும் அதில் அவர்களின் கனவுகள் பலித்து கொண்டே இருக்கும்
பெரும் படிப்பு, பெரும் பதவி இருந்தும் உலகின் மிகபெரிய கம்பெனிகளில் மிகபெரிய எதிர்காலம் இருந்தும் நாட்டுக்காய் வாழ்ந்து நாட்டுக்காய் உழைத்து , தன் கடைசிமூச்சுவரை இந்நாட்டை பலபடுத்திய அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அந்த மனோகர் பாரிகரின் நினைவு நாளில் தேசம் அவரை கண்ணீரோடு நினைவு கூர்ந்து அவர் வழியில் தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்கின்றது
By
Stanley Rajan
DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.