அண்ணாமலை பாஜக உறுப்பினராக எங்கள் ஊருக்குள் வர விடமாட்டோம் என சில இஸ்லாமிய குடியிருப்புக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நாமெல்லாம் இந்தியாவில் இருக்கின்றோமா இல்லை ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருக்கின்றோமா என நினைத்து பார்க்க வைக்கின்றது

நடப்பது ஜமாத் தேர்தல் அல்ல, இஸ்லாமிய தலைவருக்கான தேர்தல் அல்ல. இது தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல்

அதில் எங்கள் ஊருக்குள் அவர் வரகூடாது, இவர் வர கூடாது என்பதெல்லாம் மிகபெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்

அந்த மக்கள் சொல்வது போல இந்துக்களும் இதர மதத்தினரும் சொல்ல ஆரம்பித்தால் இங்கு முழு வன்முறையும் குழப்பமும்தான் மிஞ்சுமே தவிர வேறொன்றும் மிஞ்ஞாது

ஒரு வாதத்துக்கு அண்ணாமலை வரகூடாது என்றால் இதற்கு முன் அண்ணாமலை எம்.எல்.ஏவாக இருந்து அவர்களை வஞ்சித்திருக்க வேண்டும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்த்திருக்க வேண்டும்

அல்லது ஒரு இடத்தில் மததுவேஷம் பேசியிருக்க வேண்டும்

அதெல்லாம் இல்லா நிலையில் நீ பாஜக அதனால் இந்த ஊருக்குள் வரகூடாது என்றால் பாஜக ஆளும் நாட்டை விட்டு இவர்கள் கிளம்ப தயாரா?

இங்கு பாஜகவினால் இஸ்லாமியருக்கு எந்த சிக்கலுமில்லை, அவர்களின் வழிபாட்டுக்கோ இதர சடங்குகளுக்கோ ஒரு ஆபத்துமில்லை

முத்தலாக்கின் பாஜக அணுகுமுறை கூட இஸ்லாமிய பெண்களின் துயர் துடைத்ததே அன்றி வேறென்ன செய்தது?

இதே கோஷ்டி நாளை கலெக்டர் ஒரு இஸ்லாமியன் அல்ல, காவல்துறை ஒரு இஸ்லாமியர் அல்ல அதனால் வரகூடாது என்றெல்லாம் பேசினால் என்னாகும்?

இதே வைராக்கியத்துடன் அக்கம் பக்கம் இந்துக்களெல்லாம் சிந்தித்தால் என்னாகும்?

இங்கு மதகலவரங்களோ இதர விரும்பதகாத சம்பவங்களோ தானாய் உருவாவது அல்ல, இம்மாதிரி குதர்க்கவாதிகளை சில சமூக விரோத சக்திகள் தூண்டிவிடுவதில் இருக்கின்றது

பள்ளபட்டி மக்கள் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

அப்படியும் அண்ணாமலை மிக சரியான கேள்விகளை எழுப்புகின்றார், இஸ்லாமிய மார்கத்தின் ஒவ்வொரு வரி குறித்தும் தான் வாதிக்க தயார் என்கின்றார், நல்ல இஸ்லாமியர்கள் அதை எதிர்கொள்ளலாம்

மாறாக இது எங்கள் ஊர் என ஆப்கன் பழங்குடியினர் போல அடம்பிடிப்பது இந்த ஜனநாயக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்துமே தவிர சல்லிக்கு பிரயோசனபடாது, எந்த பலனையும் கொடுக்காது

பள்ளபட்டி இஸ்லமியர் அண்ணாமலை கருத்தை கருத்துக்களால் எதிர்கொள்ளல் வேண்டும்

மாறாக எங்கள் ஊருக்குள் அவர் வரகூடாது என்றால் இவர்கள் மற்ற ஊருக்கு செல்லும் அவசியம் வரும்பொழுது என்ன செய்வார்களாம்?

தொகுதி வேட்பாளராக அவரிடம் நியாயமான தேவைகளை கோரிக்கை வைக்கலாம், பாஜகவின் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பலாம், வேண்டிய விளக்கங்களை எல்லா வகையிலும் பெறலாம்

மாறாக இப்படியெல்லாம் மிரட்டுவது சரியல்ல, அது ஏற்புடையதுமல்ல‌

பள்ளபட்டி மக்கள் நல்ல முடிவு எடுத்து தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பார்கள் என தமிழகம் நம்புவது போல் நாமும் நம்பிகொண்டிருக்கின்றோம்

By
Stanley Rajan

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.