மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தினால் அதிகமான நகரங்களில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளத்தாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தால் திறந்த வெளியில் இருக்கும் கழிப்பிடங்களை உபயோகப்படுத்துவதன் மூலம் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை தடுப்பதற்கு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தை கொண்டு கிராமப்புறங்களில் சுத்தமான கழிப்பிடங்களை கட்டப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை பற்றி அண்மையில் நடத்திய ஆய்வில் கிராமப்புறங்கள், நகரங்களில் உள்பட பல இடங்களில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் 99 சதவீதம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது

இதை பற்றி பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி; இந்த தூய்மை இந்தியா திட்டத்தினால் 99 சதவீத கிராமப்புற பஞ்சாயத்துகளில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் மேற்கு வங்காள மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் ஆய்வு நடத்தப்படவில்லை.

அந்த மாநிலத்திலும் ஆய்வை மேற்கொண்டால், 100 சதவீத திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலைமை உருவாகும் என தெரிவித்துள்ளார். மேலும், சுகாதாரத்தை முன்வைத்து மத்திய அரசு பல சிறப்பாக, தூய்மையான திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது. 100 சதவீத நகரப்புறங்களில் இருக்கும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இவ்வாறு மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.