திராவிட மாயையை அகற்றுவோம். ‘திராவிட’ அல்லது ‘திராவிடம்’ என்ற சொல் இன்றைய தமிழ்நாட்டின் பகுதிகளை மட்டும் தனித்துவமாகக் குறிக்கும் ஒன்றல்ல. ‘திராவிடம்’ என்பது மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியைக் குறிக்கும் புவியியல் சொல் – ‘திரா’ (மூன்று) ‘வித்’ (கடல்).

ராபர்ட் கால்டுவெல் மற்றும் ஜி.யூ. போப்பின் கைக்கூலிகள், அதாவது தி.க மற்றும் தி.மு.க ஆகியோர் கூறுவது போல் ‘திராவிடன்’ என்ற சொல்லுக்கு இனம் எதுவும் இல்லை. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டி, குய், குவி, பிராஹுய், குருக் உள்ளிட்ட திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் மக்களைக் குறிக்கிறது. இன்று, அம்மொழிகள் தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்ல, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, நேபாளம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் பலூசிஸ்தானிலும் கூட பரவியிருக்கின்றது.

எனவே, ‘திராவிட’ பேரினவாதிகள் ‘வட இந்தியர்களுக்கு’ எதிராகக் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, ‘திராவிட’ வட இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்போது விஷயத்திற்கு வருவோம் – தமிழகம் எப்போதுமே ஈ.வி.ராமசாமி, (அவரைப் பின்பற்றுபவர்களால் ‘பெரியார்’ என்று அழைக்கப்படுகிறார்), அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு எவ்வாறு கடமைப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி ‘திராவிட’ சித்தாந்தவாதிகள் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

தமிழகம், தனது புவியியல் மற்றும் வரலாற்று சூழ்நிலைகளின் காரணமாக எப்போதுமே ஒரு படி முன்னால் தான் இருந்தது என்பதை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அவர்கள் இந்தக் கட்டுக்கதைகளை 50 ஆண்டுகளாக சுற்றி வருகின்றனர். ஆனால் இணையத்தின் காரணமாக இந்த சித்தாந்தவாதிகளின் வெற்று கூற்றுக்களை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். திராவிட அனுதாபிகள் மற்றும் தி.மு.கவினால் பரப்பப்பட்ட சில கட்டுக்கதைகளை இங்கே நாம் உடைத்துள்ளோம்.

1. திராவிட இயக்கம் தமிழகத்தில் சாதி முறையை ஒழித்தது:

சாதி பெயர்கள் மக்களின் பெயருடன் இணைக்கப்படாத ஒரே மாநிலமாக இருப்பதால், பெரியார் மட்டும் இல்லையென்றால், தமிழ்நாட்டில் இருந்து சாதி ஒழிக்கப்பட்டிருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற சில இந்திய மாநிலங்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதற்கு அவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

மாறாக, திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பிறகு தான் சாதி அடிப்படையிலான எண்ணங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. சாதி அடிப்படையிலான அமைப்புகளில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது, மேலும் தமிழகத்தின் வட மற்றும் தெற்கு பகுதிகளிலும் சாதி அடிப்படையிலான சம்பவங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

தி.மு.க தனது கட்சியில் கூட சாதி வரிசை முறையை நிறுவியுள்ளது. சமூக நீதிக்கான வீரர்கள் தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள் தான் தலித்துகளை ஒடுக்கி சுரண்டுகிறார்கள். இவர்களின் சொந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகின்றனர்.

2. திராவிட இயக்கங்கள் மட்டுமே கோயில் நுழைவில் தலித்துகளுக்கு உதவியது:

தமிழ்நாட்டின் பாடப்புத்தகங்களில் வெற்றிகரமாக பதிவு செய்து, தமிழகத்தில் கோயில் நுழைவு இயக்கத்தின் வரலாற்றிற்கு முற்றிலுமாக வெள்ளையடித்த மற்றொரு பெரிய பொய் இது. கோயில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீட்டுச் சட்டம் சி.ராஜகோபாலாச்சாரி அரசாங்கத்தால் 1939 இல் நிறைவேற்றப்பட்டது, இதன் மூலம் ஷானார்கள் மற்றும் தலித்துகள் இந்து கோவில்களில் நுழைய இருந்த தடை நீக்கப்பட்டது.

இந்த நேரத்தில், வைத்தியநாத ஐயர் தமிழ்நாடு ஹரிஜன் சேவ சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த சீர்திருத்தத்தை முத்துராமலிங்கம் தேவர் ஆதரித்தார், அவர் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டார்: “நான் மீனாட்சி கோயிலின் நுழைவாயிலில் இருப்பேன். கோவிலுக்குள் தலித்துகள் நுழைவதைத் தடுக்கத் துணிந்தவர்கள், அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம். நான் அவர்களுக்கு பதிலளிப்பேன் “. இந்த அறிக்கைக்குப் பிறகு, சாதி இந்துக்கள் தலித்துகளின் கோயில் நுழைவை எதிர்க்க தயங்கினர்.

ஜூலை 8, 1939 அன்று, எல். என். கோபாலசாமி மற்றும் அவரது ஆறு தலித் நண்பர்களுடன் மதுரையில் உள்ள மீனாட்சி கோயிலுக்குள் வைத்தியநாத ஐயர் நுழைந்தார். இந்த சம்பவத்தை பெரியார் கண்டனம் செய்தார், மேற்கூறிய நிகழ்வில் அவர் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை.

3. திராவிட கட்சிகள் மட்டுமே இந்தியாவில் கல்வி புரட்சியை கொண்டு வந்தன:

தி.மு.க உறுப்பினர்களால் பரப்பப்பட்ட கதைகளுக்கு ஏற்றவாறு இது மற்றொரு கட்டுக்கதை. 1961 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 36.39% ஆக இருந்தது, ஏற்கனவே இந்தியாவில் 2வது மிக உயர்ந்ததாக இருந்தது. எனவே, நாம் ஏற்கனவே ஒரு படி எல்லாரையும் விட முன்னால் இருந்தோம். திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது 1967 ல் மட்டுமே. உத்தரபிரதேசம் மற்றும் பீகாரின் கல்வியறிவு விகிதம் முறையே 20.87% மற்றும் 21.95%. கடந்த 50+ ஆண்டுகளில், தமிழகம் ஓரளவிற்கு மட்டுமே முன்னிலை வகிக்கிறது. உண்மையில், கடந்த 50 + ஆண்டுகளில் எழுத்தறிவு சதவீதத்தில் அதிகரித்து வரும் மாற்றம் 43.7% ஆகும், இது உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களை விட மிகக் குறைவு.

காமராஜரின் மதிய உணவு திட்டம்தான் ஏழை பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வந்தது. திராவிடக் கட்சிகளும் இதைப் பின்பற்றின. எம்.ஜி.ஆர் தான் 1982 ஆம் ஆண்டில் மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். மகாராஷ்டிரா, திரிபுரா, மணிப்பூர் போன்ற பல மாநிலங்கள் உள்ளன, அவை 1961ல் தமிழ்நாட்டைப் போலவே அல்லது பின்னால் இருந்தன, இப்போது தமிழ்நாட்டைப் போலவே அதிக முன்னேற்றம் அடைந்துள்ளன அல்லது சம அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

4. திராவிடக் கட்சிகளால் மட்டுமே தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கிடைத்தன:

நீதிபதிகள், டாக்டர்கள் போன்ற சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ள தலித்துகள் திராவிடக் கட்சி ஆட்சியின் காரணமாக மட்டுமே அந்த நிலையை அடைந்துள்ளனர் என்று எப்போதும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. திமுக எம்.பி.க்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி கூட இது தி.மு.க. போட்ட பிச்சை காரணமாக மட்டுமே என்று கூறினார், தலித்துகள் இந்தியாவின் வெவ்வேறு நீதிமன்றங்களில் நீதிபதிகளாக முடிந்தது.

ஆனால் உண்மையில் இடஒதுக்கீடு கொள்கை சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது. 1902 ஆம் ஆண்டில் கோலாபுவின் சத்ரபதி சாஹு மகாராஜா தனது சுதேச மாநிலங்களில் பிராமணரல்லாதவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியிருந்தார். 1943 ஆம் ஆண்டில், பட்டியல் சாதியினருக்கு ஆதரவாக சேவைகளில் 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

1951ல் 16 % எஸ்சி / எஸ்டிக்கு இட ஒதுக்கீடு மற்றும் ஓபிசிக்களுக்கு 25% இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஓபிசி மற்றும் எஸ்சி / எஸ்டி இருவருக்கும் இடஒதுக்கீடு சதவீதத்தை 31 மற்றும் 18 சதவீதமாக ஆக்கியது. திராவிடக் கட்சிகள் ஏற்கனவே இருந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தின. ஆனால் 1967ல் தங்கள் அரசாங்கத்திடமிருந்து தான் எல்லாம் தொடங்கியதைப் போல வெள்ளையடிக்கத் தொடங்கின. உண்மையில், ஏராளமான ஏழை சமூகங்களின் மேம்பாட்டிற்காகப் போராடிய எண்ணற்ற மக்கள் உள்ளனர். தி.மு.க செய்ததெல்லாம், பஞ்சமி நிலங்களை அபகரித்ததன் மூலம் தலித்துகளுக்கு அநீதி இழைத்தது தான்.

5. பெரியர் பெண்கள் உரிமைகளை வென்றவர்:

பெரியார் பெரும்பாலும் பெண்ணின் உரிமைகளைப் பாதுகாக்க உதவிய ‘தூதுவர்’ என்று புகழப்படுகிறார். உண்மையில், இந்த மனிதன் தனது நண்பர்கள் சிலரிடம் ரகசியமாகச் சென்று தனது முதல் மனைவி நாகம்மையைக் காட்டி, அவள் ஊரில் ஒரு புதிய தாசி (விபச்சாரி) என்று சொன்னார் .

கோயிலுக்குச் செல்லும்போது அவளைத் துன்புறுத்தும்படி அவர்களிடம் கேட்டார், ஏனெனில் அவர் வாதங்களால் மனைவி கோவிலுக்கு செல்வதை நிறுத்த முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கோவிலுக்கு செல்வதை நிறுத்தினார். இது தனது ‘பகுத்தறிவுவாத’ கணவர் ஆடிய தந்திரம் என்று பின்னர் அவள் அறிந்தாள்.

6. தி.மு.க காரணமாக தான் சமூக நல்லிணக்கம் சாத்தியமானது:

தமிழகம் முன்பு ‘அமைதி பூங்கா’ (அமைதியான தோட்டம்) என்று புகழப்பட்டது. ஆனால் இன்று, சமூக அமைதியின்மையே தி.மு.க.வின் உத்தரவின் பேரில் தான் செய்யப்படுகிறது. PETAவுக்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான போராட்டமாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டத்தில், ஒரு திமுக ஓநாய், நடுநிலை கால்நடை வளர்ப்பாளர் என்ற போர்வையில் சேர்ந்து போராட்டத்தை திசை திருப்பியது. மாநில அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட்டு வந்த சமூக விரோத சக்திகள் ஊடுருவியதால் தூத்துக்குடி போராட்டங்களும் வன்முறையாக மாறியது.

இப்போது மட்டுமல்ல, பல இரத்தக்களரி நிகழ்வுகளுக்கும் திமுக பொறுப்பாக உள்ளது. உதாரணமாக, 1993 ஆம் ஆண்டு கோடியம்குளம் சம்பவம், மஞ்சோலை படுகொலை, மத அடிப்படையில் கோவையில் குண்டுவெடிப்பு ஆகியவை அனைத்தும் தி.மு.க.வின் கண்காணிப்பில் நடந்தவை. உண்மையில், கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகள், தி.மு.க ஆட்சியின் கீழ் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் விடுவிக்கப்பட்டனர்.

தமிழர்களின் ‘மீட்பர்; என்ற அவர்களின் கூற்றுகளுக்கு மாறாக, தி.மு.க அதன் நல்ல செயல்களை விட தமிழ்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சி ஒரு குடும்பம் நடத்தும் நிறுவனத்தைத் தவிர வேறொன்றுமில்லை, அங்கு அவர்கள் சொந்த நிர்வாகிகள் கூட ‘நாய்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கலள் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் அவல நிலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.