சமீபத்தில் ஒரு விளம்பரம ்வெளியானது. அதில் பெண் ஒன்றும் பணம் இல்லை. அதனால் பெண்ணை தானம்செய்வது ஏற்கத்தக்கது அல்ல. ஆகையால் கன்யாதானம் என்பதுஒரு தவறான சடங்கு என்று கூறப்பட்டது.  இதற்கு எதிர்வினையாக சில ஹிந்துக்கள் தங்கள்கோபத்தை வெளிப்படுத்தினர். இன்னும் சிலரோ வருமாறு பதில் கூறினார்கள் “நமது மதத்தில் சுயம்வரம் எனும் பழக்கம்தான் உண்மையாக இருந்தது. கன்யாதானம் எனும் சடங்கு இருந்ததில்லை” என்று.

இதுபற்றி சூடான விவாதங்கள் நடந்துவரும் வேளையில் சர்வதேச பிரசித்திபெற்ற யோகா குருவான ஶ்ரீஶ்ரீரவிசங்கர் அவர்களின்ஒரு பழையகாணொளி இணைதளங்களில்  பரவத் துவங்கியது. கன்யாதானம் என்பது இடைப்பட்டகாலத்தில் ஏற்பட்ட ஒரு திரிபு. இது பற்றி வேதங்களில் எந்த விதமான குறிப்புகளும் இல்லை. வேதங்களில் கன்யாதானம்பற்றி மந்தரங்கள் ஏதும் இல்லை. ஆகவே கன்யாதானம் எனும் பழக்கம் திருமணச் சடங்குகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

இது தவிற செப்டம்பர் 21 தேதி ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியானஅவரது நேர்காணலில் இதே கருத்தினை அவர் வலியுறுத்தினார். (https://tinyurl.com/taj4x5s2)

அவர் கூறியதாவது:

“வேதங்களில் கன்யாதனம் என்று எதுவும் இல்லை. பின்னர் வந்த ஸ்ம்ருதிகளில் பாணிக்ரஹணம் (மணப்பெண்ணின் கைபிடித்தல்) என்பது பற்றிதான் குறிப்புகள்உள்ளன. இது (பாணிக்ரஹணம்) ஒருவைதிக-சம்ஸ்க்ருதச் சொல். ஆடவரும் பெண்டிரும் கணவன் மனைவி எனும் நிலையை அடைய கைத்தலம் பற்றினார்கள். வேத கலாசாரத்தில் சம உரிமை இருந்தது. காலம் செல்லச்செல்ல இதில்சிதைவு ஏற்பட்டது. கன்யாதானம் திருமணச்சடங்கில் சேர்ந்து போனது. தானம் செய்வதற்கு பெண் ஒரு பொருளல்ல.”

அவர் மேலும் கூறுகிறார்” நான் பாணிகிரஹணம் என்று சொல்லத்தான் விரும்புவேன். “என்னுடைய மகளின் கைத்தலத்தைப் பற்றிக்கொள்” என்றுபெண்ணின் தந்தை கூறுவார். இந்த விஷயத்தில் இதுதான் சரியான புரிதல். கன்யாதானம் என்பதுஅகற்றப் படவேண்டும். இதனால் வேதங்கள் பற்றிய மதிப்பிற்கோ, தத்துவத்திற்கோ, கௌரவத்திற்கோ எந்தவிதத்திலும் ஊறு விளைந்துவிடாது. சொல்லப்போனால் வேதங்கங்களின் மதிப்பு உயரத்தான் செய்யும்.”

இதன்பின் மத நம்பிக்கையுள்ள ஹிந்துக்கள் பலரின் மனதில் சந்தேகம் தோன்றத் தொடங்கிவிட்டது ” உண்மையிலேயேவேதங்களில் கன்யாதானம்பற்றிய குறிப்பு இல்லையா? இதனைப் பின்பற்றுவது வேத நெறிக்கு விரோதமானதா? பின்னர் வந்த சாஸ்திரங்களிலும் இதுபற்றி குறிப்புகள் இல்லையா” ?

இப்படிப்பட்ட சந்தேகங்களை சிலர் என்னிடம் கேட்டனர். நானறிந்த வேதபண்டிதர்கள் பலரிடமும் இதே போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

ஹிந்து பழக்கவழக்கங்களில் நம்பிக்கை கொண்ட இவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் வேதங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும் கன்யாதானம் பற்றிய சான்றுகள் பலவற்றை வேதபண்டிதர்கள் கொடுத்துள்ளனர்.

வேதங்களில் இது பற்றி குறிப்புகளை பார்ப்பதற்கு முன் வேதங்களைப் பற்றி நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்”வேதங்கள் (ஸம்ஹிதை பகுதி) வாழ்கையில் கொள்ள வேண்டிய தள்ள வேண்டிய பழக்கவழக்கங்களுக்கான வழிகாட்டிஅல்ல. அவை கடவுளர்கள் பற்றி கவிதை வடிவிலான (ரிக்குகள்)   துதிகள், பிரார்த்தனைகள் ஆகியவைகளின் தொகுப்பு.”

துதிகள்வடிவிலான இந்தவேதங்களில் எதைச்செய்ய வேண்டும், எதனைச் செய்யக் கூடாது என்பது பற்றிய விதிகள், தடைகள் இருக்காது. ஆகவே விதிகள், தடைகள்  பற்றி வேதமந்த்ரங்களிலிந்து தொனிக்கும் அர்தத்தைத் புரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக: “ஜனகர் விதிமுறைப்படிி சீதையை ராமனுக்கு மணம் செய்து வைத்தார்”.

இந்த வாக்கியத்தில் “கன்யாதானம்” என்று குறிப்பிடப்படவில்லை. “விதிமுறைப்படி” என்று உள்ளது. ராஜா ஜனகர் யாக்ஞவல்க்யரின் சிஷ்யர் என்பதனால்அவர் சுக்லயஜுர்வேதத்தைப் பின்பற்றுபவர் ஆகிறார். ஆகவே சுக்லயஜுர்வேதத்தினை ஒட்டிய பாரஸ்கர-க்ருஹ்யசூத்திரத்தில்  கூறப்பட்டுள்ளபடி அவர் திருமணம்செய்து வைத்திருப்பார். இதனை நாம் குறிப்பால் உணர முடியும்.

ஆகவே அடுத்தபடியாக கொடுக்கப்படவுள்ள வேதமந்த்ரங்களில் திருமணம் பற்றிய கருத்துக்கள் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.

ரிக்வேதத்தின் ஆச்வலாயன ஸம்ஹிதையின் பத்தாவது மண்டலத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் கடைசி சூக்தத்தில் (துதிதொகுதி) 47 மந்த்ரங்கள் உள்ளன. இந்த மந்திரங்கள் ரிக்வேதத் திருமணங்களில் ஆசீர்வாதம் அளிக்கும் போது உச்சரிக்க்கப் படுகின்றன. கன்யாதானத்திற்கான வேத ஆதாரமாக அந்த சூக்தத்திலிருந்து இரண்டு மூன்று மந்திரங்களைமட்டும் சாயணாசாரியாரின்உரையுடன்பார்க்கலாம்.

ஸோமோ வதூயு: அபவத் அஶ்வினாஸ்தாம் உபா வரா|

ஸூர்யா யத் பத்யே ஶம்ஸந்தீம்மனஸா ஸவிதா அததாத்|| (ரிக்வேதம் 10-7-85-9)

இந்த மந்திரத்திற்கு சாயணர் உரை:

சோமன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதே சமயத்தில் அச்வினீ குமாரர்களும் மணமகன்களாக விரும்பினர். அப்போது ஒரு கணவனை அடைய விரும்பிய ஸூர்யையை (தனது பெண்ணை) ஸவிதா (தந்தை) சோமனுக்கு அளித்தார் (அததாத்).

அதே சூக்தத்தில் இன்னொரு மந்த்ரம் –

க்ருப்ணாமி தேஸௌபகத்வாய ஹஸ்தம்மயா பத்யாஜரதஷ்டிர்யதாஸ:|

பகோ அர்யமாஸவிதா புரந்தி: மஹ்யம் த்வாஅது: கார்ஹபத்யாயதேவா: || (ரிக்வேதம் 10- 07 – 85 – 36)

ஸாயணர் உரை:

மணப்பெண்ணே! உன் கையைப் பற்றுகிறேன். எதற்காக? மேன்மைகளை அடைய. நீ என்னுடன் நெடுங்காலம் வாழ்ந்து மூப்பினை அடைவாயாக. பகன், அர்யமா, பூஷா ஆகிய தேவர்கள் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். எதற்காக? குடும்ப வாழ்கையை மேற்கொள்வதற்காக.

இன்னொரு மந்த்ரம்:

அந்ருக்ஷரா ருஜவ: ஸந்து பந்தாயேபி: ஸகாயோயந்திநோ வரேயம் |

ஸமர்யமா ஸம்பகோ மேநிநீயாத் ஸம்ஜாஸ்பத்யம் ஸுயமமஸ்து தேவா: || (ருக்வேத10-07-85-23)

என்னுடைய உற்றார்வரேயரை (பெண்ணைவேண்டிய மணமகனின் வேண்டுதலை ஏற்ற பெண்ணின் தந்தையை) பார்க்கச் செல்லும் போது அவர்களுடைய பாதை முட்கள் முதலியவை நேரானதாக இருக்கட்டும். அர்யமா எனும் தேவன் நல்ல பாதையைக் காட்டட்டும். பகன் எனும் தேவன் நல்ல வழியில் இட்டுச் செல்லட்டும். கடவுளர்களே! ஜாஸ்பத்யம் (விவாகவாழ்கை) நிலையானதாக அமையட்டும்.

முன்பு குறிப்பிடப்பட்ட ஶ்ரீஶ்ரீ ரவிசங்கரின் நேர்காணலில் அவர் ஸ்ம்ருதிகளிலும் கூட பாணிகிரஹணம் தான் உள்ளது, கன்யாதான என்பதற்காக குறிப்புகள் இல்லைஎன்றார். அவரின்இந்த கருத்தினால் சாஸ்திரங்களில் பற்றிக்கொண்ட   ஹிந்துக்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டதால், அவர்கள் மனதில் சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகங்கள் அகிலஸ்மிரிதிகளிலிருந்து இதோ சில குறிப்புகள் –

சிக்ஷா (உச்சரிப்புக் முறை விளக்கும் சாஸ்திரம்), வ்யாகரணம்(இலக்கணம்), சந்தஸ்(யாப்பிலக்கணம்), நிருக்தம்(வேதச் சொற்ப்பொருளை விளக்கும் விசேஷ நூல்), ஜ்யோதிஷம்(காலம் கணிக்கும் சாஸ்திரம்), கல்பம் (வேதம் சார்ந்த சடங்குகளை செய்யும் விதிமுறைகள் பற்றிய சாஸ்திரம்) ஆகியவை வேதங்களின் ஆறு அங்கங்கள். ஆறாவது அங்கமான கல்பத்தில் ஶ்ரௌத கல்பம் (வைதிக யாக விதிமுறை), க்ருஹ்ய கல்பம் (வீட்டளவிலான சடங்கு விதிமுறைகள்) முதலிய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வேத பிரிவுக்கும் ஒவ்வொரு ஶ்ரௌத, க்ருஹ்ய கல்ப நூல்கள் உள்ளன.

பல ரிஷிகள் தொகுத்தளித்துள்ள க்ருஹ்ய நூல்களில் கன்யாதானம் பற்றிய விதிமுறைகள்உள்ளன என்றாலும்இந்த கட்டுரையில் ரிக்வேத மந்த்ரங்கள்மேலே குறிப்பிடப்பட்டதால் ரிக்வேததின்ஆச்வலாயனக்ருஹ நூலில் உள்ள கன்யாதானவிதிமுறைபற்றி பார்ப்போம்.

“புத்திமதே கன்யாம் ப்ரயச்சேத்”

ஆச்வலாயன-க்ருஹ்யஸூத்ரம் – 1.5  (வரலக்ஷணப்ரகரணம்)

அறிவாளியான (மணமகனுக்கு) பெண்ணை/கன்யையைஅளிக்க வேண்டும்.

ப்ரயச்சேத் எனும் சொல் கவனிக்கத்தக்கது. யச்ச – என்பது தானத்தினைக் குறிக்கும் வேர்ச்சொல். ப்ர என்பது – சிறந்த எனும் பொருள் கொண்டது. ப்ரயச்சேத் – சிறந்த விதத்தில் அளிக்க வேண்டும்.

அலங்க்ருத்யகன்யாம் உதகபூர்வாம்தத்யாத் எஷ ப்ராஹ்மோ விவாஹ:

ஆச்வலாயன க்ருஹ்யஸூத்ரம் – 1.6

பெண்ணை/கன்யையை அலங்கரித்து தண்ணீருடன் அளிக்கவேண்டும் (தாரைவார்க்கவேண்டும்). இதுப்ராஹ்ம விவாகம்.

இவ்விதம் வேதஸம்ஹிதையிலும், வேதத்தின் ஆறாவது அங்கமான கல்பத்திலும் கன்யாதானம் பற்றிய  தெளிவான குறிப்புகள் உள்ளன.

வேத வேதாங்கங்கள் தவிற, பல ஸ்ம்ருதி நூல்களிலும் கன்யாதானம் பற்றிய தெளிவான குறிப்புகள் உள்ளன. இதுபற்றி மிகப் புராதனமான, பிரசித்தமான,  மிகவும் மதிக்கப்படும், மனுஸ்ம்ருதி  (மூன்றாவது அத்தியாயம்) வருமாறு கூறுகிறது –

சதுர்ணாமபி வர்ணாநாம் ப்ரேத்ய சைஹஹிதாஹிதான் |

அஷ்டாவிமான் ஸமாஸேநஸ்த்ரீவிவாஹாந்நிபோதத ||20||

ப்ராஹ்மோ தைவஸ்ததைவார்ஷ: ப்ராஜாபத்யஸ்ததாஸுர: |

காந்தர்வோ ராக்ஷஸஶ்சைவ பைஶாசஶ்சாஷ்டமோதம: ||21||

யோ யஸ்யதர்ம்யோ வர்ணஸ்யகுணதோஷௌ சயஸ்ய யௌ|

தத்வ: ஸர்வம்ப்ரவக்ஷ்யாமி ப்ரஸவேச குணாகுணான் ||22||

நான்கு வர்ணங்களுக்கும் இவ்வுலகிலும் மேலுலகிலும் நன்மை, தீமை விளைவிக்கும் எட்டு விதமான திருமண முறைகளை அறிந்து கொள்ளுங்கள். அவையாவன- ப்ராஹ்ம-விவாஹம், தைவ-விவாஹம், ஆர்ஷ-விவாஹம், ப்ராஜாபத்ய-விவாஹம்,  ஆஸுர-விவாஹம், காந்தர்வ-விவாஹம், ராக்ஷஸ-விவாஹம், பைசாச-விவாஹம்.

ஷடாநுபூர்வ்யா விப்ரஸ்யக்ஷத்ரஸ்ய சதுரோவராந் |

விட்ஶூத்ரயோஸ்துதாநேவ வித்யாத்தர்ம்யாநராக்ஷஸாந் ||23||

பிராமணனுக்கும் கிரமமாக முதல் ஆறுவிவாக முறைகள் தர்மமாகும். கடைசி நான்கு விவாகமுறைகள் சத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கு தர்மமாகும்.

ஆச்சாத்ய சார்சயித்வா ச ஶ்ருதஶீலவதேஸ்வயம் |

ஆஹூய தாநம்கந்யாயா ப்ராஹ்மோதர்ம: ப்ரகீர்தித: ||27||

வேதம் கற்றறிந்த, நல்ல குணநலமுள்ள, வரனை அழைத்துஅவரை பூஜித்து கன்யாதானம் செய்தல் ப்ராஹ்ம விவாகம் எனப்படும்.

யஜ்ஞே துவிததே ஸம்யக்ருத்விஜே கர்மகுர்வதே |

அலங்க்ருத்ய ஸுதாதாநம் தைவம் தர்மம்ப்ரசக்ஷதே ||28||

பெரிய யஜ்ஞம் நடைபெறும் போதுவஸ்திர, ஆபரணஅலங்காரத்துடன் கன்யாதானம் செய்தல் தைவவிவாகம் எனப்படும்.

ஏகம் கோமிதுநம் த்வே வாவராதாதாய தர்மதஃ |

கந்யாப்ரதாநம் விதிவதார்ஷோ தர்மஃ ஸஉச்யதே ||29||

ஒன்று அல்லது இரண்டு எருது ஜோடிகளை வரனிடமிருந்து யஜ்ஞத்திற்காகப் பெற்றபின் முறைப்படி கன்யாதானம் செய்தல்ஆர்ஷ விவாகம்எனப்படும்.

ஸஹௌபௌ சரதாம்தர்மமிதி வாசாநுபாஷ்ய ச |

கந்யாப்ரதாநமப்யர்ச்ய ப்ராஜாபத்யோ விதி: ஸ்ம்ருத||30||

“நீங்கள் இருவரும் அறத்தின் வழியில் வாழுங்கள்” என்று கூறி மணமகன்-மணமகள் ஆகியோரைப் பூஜித்து செய்யப்படும் கன்யாதானம் ப்ராஜாபத்ய விவாகம் எனப்படும்.

ஜ்ஞாதிப்யோ த்ரவிணம் தத்த்வா கந்யாயை சைவ ஶக்தித:|

கந்யாப்ரதாநம் ஸ்வாச்சந்த்யாதாஸுரோ தர்ம உச்யதே ||31||

மணமகனின் பெற்றோருக்கு வரதட்சிணை  கொடுத்து, பெண்ணுக்கும்  இயன்ற அளவு பணம் கொடுத்து ஆசையுடன் கன்யாதானம்  செய்தல் ஆஸுர விவாகம் எனப்படும்.

இச்சயாந்யோந்யஸம்யோக: கந்யாயாஶ்ச வரஸ்ய ச |

காந்தர்வ: ஸ து விஜ்ஞேயோ மைதுந்ய: காமஸம்பவ: ||32||

வரனும், பெண்ணும் தங்கள் சுயவிருப்பத்தினால் ஒன்றிணைவது காந்தர்வ விவாகம் ஆகும். இதில் வரனுக்கும் பெண்ணுக்கும் இடைய உள்ள இச்சையே பிரதானமாகும்.

விசேஷமான சூழ்நிலைகளில் சத்திரியர்கள் ராக்ஷஸ விவாகம் செய்துகொள்ளலாம் என்றாலும், ராக்ஷஸ, பைசாச விவாகங்கள் எந்த வர்ணத்தவர்க்கும் சாதாரணமாகவே உகந்ததல்ல என்பதால் அது பற்றி இங்கு விவரிக்கவில்லை.

காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் ஆகிய மூன்று விவாக முறைகளைத் தவிற மற்ற ஐந்து முறைகளை விவரிக்கும் போது மனு கன்யாதானம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ரிக்வேத ஸம்ஹிதையில் கன்யாதானம் பற்றிய குறிப்பும் கொடுக்கப்பட்டது.

அடுத்ததாக, மனுஸ்ம்ருதியை பிரமாணமாக ஏற்கலாமா கூடாதா, தானமாக வழங்க கன்யை ஒரு பொருளா? அது சரியா என்பது பற்றிய விவாதம் இங்கு ஏற்றதல்ல. இது பற்றி தெளிவு பெற விரும்புபவர்கள் ஜைமினி மகரிஷி எழுதிய மீமாம்ஸா ஸூத்ரத்தில் உள்ள “ஸ்ம்ருதி அதிகரம்” பகுதியை படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதே போல, பிராமணன், சத்திரியன், ஆகிய வர்ணங்களையே ஏற்காதவர்களுடன், வர்ண-ஆசிரமங்கள் பற்றிய விவாதத்தை தனியாகச் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த கட்டுரை “சாஸ்திரங்களில் கன்யாதானமே சொல்லப்படவில்லை” எனும் கருத்தினால் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்தல் எனும் குறிக்கோளுடன் எழுதப்பட்டுள்ளது. அதன் படி வேதங்கள், வேதாங்கங்கள், புராதனமான மனு ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து சான்றுகள் கொடுக்கப்பட்டன.

ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் இன்னொரு கருத்தையும் கூறியுள்ளார். அது – “பாணிகிரஹணம் மட்டுமே சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. கன்யாதானம் என்பது குறிப்பிடப்படவில்லை” .

இந்தக் கருத்தில் இரண்டு தவறுகள் உள்ளன. ஒன்று அதில் உண்மை இல்லை. இது மேலே கொடுக்கப்பட்ட வேதங்கள், ஸ்ம்ருதிகள் ஆகியவைகளிலிருந்து அளிக்கப்பட்ட சான்றுகள் மூலம் தெளிவு படுத்தப் பட்டுவிட்டது.  இரண்டாவது, இந்தக் கருத்து அறிவார்ந்ததும்/தர்க்கரீதியானதும் அல்ல.

இது பற்றிய  தர்க்க முறை வருமாறு. பாணிகிரஹணத்திற்கு முன் கன்யாதானச் சடங்கு செய்யப்படும். பெற்றோர் விவாகத்திற்கான சங்கல்பம் செய்தது, மணமகனைப் பூஜித்து கன்யாதானம் செய்வார்கள். இவ்விதம் மணப்பெண்ணின் பெற்றோரிடமிருந்து முறையாக அடைந்த பெண்ணின் கைத்தலம் பற்றிபாணிக்கிரஹண மந்திரங்களை வரன் கூறுவார். மணமகளின் பெற்றோரின் அனுமதியின்றி நினைத்த போது மணமகளின் கைத்தலம் பற்றுதல் எனும் முறையே இல்லை.


இதற்கு அன்றாட வாழ்விலிருந்து கூட உதாரணம் பார்க்கலாம். “நான் விமானத்தில் அமர்ந்திருக்கிறேன்”     என்று மட்டும் ஒருவர் கூறினாலும் – செக்கின் (உடமைகளை ஒப்படைத்தல்), செக்யூரிடி  செக் (பாதுகப்புச் சோதனை) ஆகியவைகளை செய்து விட்டு தான் வந்து அமர்ந்திருக்கிறார் என்ற விஷயங்கள் அதனுள் பொதிந்துள்ளன.  பாதுகாப்புச் சோதனைகள் முதலியவைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளாதவர் விமானத்தில் அமரமுடியாது. அதே போல பாணிக்கிரஹண உள்ளது என்றால், அதற்கு முன் கன்யாதானம் நடந்திருத்தல் அவசியமாகிறது.

ஹிந்தி முலம்:  தத்தராஜ் தேஷ்பாண்டே

தமிழில் . ம. ஜயராமன்

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.