மறுபடியும் பிராமண துவேஷத்தை கையில் எடுத்து ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவில்களில் பிராமணர்களுக்கு எதிரான சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது திமுக அரசு

மாநிலம் மிக பின் தங்கிய நிலையில் இருக்கின்றது என நிதியமைச்சரே மஞ்சள் கடிதாசி கொடுத்த நிலையில் இன்னும் ஒரு நாளைக்கு 300 கோடி கடன் வாங்கி அரசு இயக்கும் நிலையில் இப்படி பன்னெடுங்கால பொய்யினை கையில் எடுத்திருப்பது அவர்களின் திசை திருப்பும் வித்தையாகவே அறியபடுகின்றது

எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிமேல் மக்களுக்கு அவநம்பிக்கையும் வெறுப்பும் வருமோ அப்பொழுதெல்லாம் பிராமணர் மேல் வன்மத்தை கக்கி விஷயத்தை திசை திருப்புவது திமுக அரசியல்

முன்பு கருணாநிதி பல இடங்களில் அதை செய்தார், குறிப்பாக பெரும் சர்ச்சைகளில் திமுக சிக்கும் பொழுது இப்படி விஷயத்தை திசை திருப்புவார், அதையே அவர் மகனும் செய்கின்றார் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை

தெய்வங்கள் மனிதர்களை வைத்து விளையாடுமே அன்றி மனிதன் கோவில்களை வைத்து ஆடுவது அவனுக்கு பெரும் அழிவினை கொடுக்கும் என்பது இவர்களுக்கு தெரிந்தும் அதிகார போதையில் ஏதேதோ ஆடுகின்றனர்

பிராமணர்கள் அப்படி வெறுக்க வேண்டியவர்களா என்றால் இல்லை, அவர்கள் இந்நாட்டின் இந்து தர்மத்தை தாங்கி நிற்கும் அடையாளங்கள்

அவர்கள் முழு தெய்வ பணியார்களாய் இருப்பதால் முழுக்க முழுக்க ஆலயங்களில் நின்று மக்களுக்கு வழிகாட்டுவதாலும் அவர்கள் இந்துமதத்தின் ஆணிவேராய் இருப்பதாலும் இந்நாடு வளமாய் இருக்கின்றது என்பது கிரேக்கர் முதல் ரோமர் வரை எழுதிய குறிப்பு

ஆம், இதனாலே இந்துமதத்தை முழுக்க அழிக்காமல் ஆனால் இந்துக்களின் செல்வத்தை தேனி போல் உறிஞ்சி உல்லாச வாழ்வு நடத்தினர் ஆப்கானியர்

பிராமண துவேஷம் என்பது போர்த்துகீசியர் கால்வைத்த 15ம் நூற்றாண்டில்தான் இங்கு உருவானது, பிராமணர்கள் இருக்கும் வரை இங்கு அந்நிய மதம் வளராது என்பதால் கடுமையான பிராமண வெறுப்பினை அவனே உருவாக்கினான்

அந்த வழியில் வந்த மிஷினரிகள் பிரிட்டிஷ் ஆட்சியிலும் அதை தொடர்ந்தனர்

இந்துமத பெருமை அழியாமல், இந்து தர்மம் அழியாமல் இந்நாட்டை காலம் காலமாக காக்க முடியாது என உணர்ந்த பிரிட்டானியரும் அவர்களுக்கு வழிவிட்டனர்

இதில்தான் பிராமண துவேஷம் பெருகிற்று, வெள்ளையன் தனக்கு தோதாக இங்கு நீதிகட்சி இட ஒதுக்கீடு இன்னும் புரட்சி குரலை எல்லாம் எழுப்ப வைத்து அரசியல் செய்தான்

அதிலே தொடங்கிய அந்த வெறுப்புத்தான், இந்து தர்மத்தின் ஆணிவேரான பிராமணர்களை ஒழிக்க வேண்டும் என்ற அந்த நுட்பம்தான் இன்று திமுகவின் அறிவிப்புகளாக வந்து கொண்டிருக்கின்றன.

பிராமணன் என்பவன் யார்?

பிராமணன் என்பது அன்று ஒரு சபிக்கபட்ட வாழ்க்கை, அவனால் எல்லோரையும் போல இயல்பான வாழ்வினை வாழமுடியாது.

மந்திரங்கள் என்பதும் அதை உச்சாடனம் செய்வதும் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து கொண்டு மக்கள் சேவை செய்வது சாதாரணம் அல்ல, அதை பிராமணர்கள் செய்தார்கள்

பிராமண‌ நியதிபடி அவர்கள் சொத்து சேர்க்க கூடாது, பொருள் குவிக்க கூடாது, அவர்கள் தானம் ஒன்றை பெற்றே பசியாற வேண்டும்

மற்ற மக்களை போல அவர்கள் உல்லாசமாய் இருந்துவிட முடியாது, கவலையற்று அவர்கள் போக்கில் இருக்க முடியாது, மக்களை காக்கவும் , மக்கள் பல பலன்களை பெறவும் அவர்கள் உதவியும் சேவையும் மகா அவசியம்

உலகில் புரிந்து கொள்ளமுடியாத பல சூட்சுமங்களுக்கும், கால நிலை கணிப்பதற்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் தங்களை இறைநிலையிலே பிரபஞ்சத்தோடு இணைத்திருக்கும் அவர்கள் உதவி தேவை

அரசன் படையெடுப்பு முதல் விவசாயி விதைவிதைக்க நாள் குறிப்பது வரை அவர்கள் அவசியம் இருந்தது. நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் அவர்கள் தேவை இருந்தது

சுருக்கமாக சொன்னால் உலகம் இயங்க அவர்கள் ஒருவகையில் தியாக பிம்பமாக இருந்தார்கள். வழிகளை சொல்வார்கள், மந்திரங்களை ஜெபிப்பார்கள், காலநிலை கிரகநிலைகளை கணித்து சொல்லி வழிநடத்துவார்கள்

தானமாக எது கிடைக்குமோ அதை ஏற்றுகொள்வார்கள்

உண்மையில் பிராமண வாழ்வு மிகவசதியான வாழ்வாக இருத்தல் கூடாது, இங்கு அப்படித்தான் இருந்தது. அவர்கள் நாட்டுக்காக யாகம் நடத்த வேண்டும், மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்க வேண்டும், நாடும் மக்களும் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும்

அதை ஒழுங்காக செய்தார்கள், இதனால் எல்லா தரப்பும் அவர்களை ஆதரித்தது

நாட்டில் ஏகபட்ட சமூகம் உண்டு. பயிர்தொழில் உலோக தொழில், காவல் தொழில், வியாபாரம் என ஏக தொழில்கள் உண்டு, அவனவனுக்கு தொழில் செய்ய நேரமுண்டே தவிர தெய்வத்தை தேடவோ இன்னும் பல இயற்கையின் சூட்சுமத்தினை அறியவோ நேரமிருக்காது

எல்லா தரப்பின் இந்த தேவைகளை தன் தலையில் சுமந்தவன் பிராமணன்

தீண்டாமை என்பார்கள், அது எப்படி உருவாயிற்று என்பதற்கு கொரோனா காலமே சாட்சி. ஆம் பிராமணன் அரண்மனை முதல் ஆற்றங்கரையில் பிண்டம் வைப்பது வரை எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டியவன்

திதியோ, திருமணமோ, சாதகம் கணிப்போ அவன் பல இடங்களுக்கு சென்று பலரை சந்திக்க வேண்டும், பல சூழலுக்கு செல்ல வேண்டும், அதனால் அவன் நோய்வாங்கும் அல்லது பரப்பும் வாய்ப்பு இருந்தது

இதனால் அவன் தனக்கு தானே வேலியும் இட்டு கொண்டான்

பிராமணன் கல்வி பறித்தான் என்பார்கள், அடுத்தவனை வழிபடவிடவில்லை என்பார்கள்

அல்ல, பக்தி யார் செய்தாலும் பலன் உண்டு, நாயன்மார்கள் 63 பேரில் பிராமணர் வெகு சிலரே

பிராமணர் யாரின் கல்வியினையும் பறிக்கவில்லை. அன்று கல்வி என்பது வாழ்க்கை கல்வி அது அரச பாடம், ராணுவம், விவசாயம், சிற்பம், கலை, தச்சு என பலவாறு இருந்தது

அதை எல்லாம் பிராமணர் தொட்டு ஆசீர்வதித்து பிரார்த்தித்து தொடங்கி வைத்து வந்தார்களே தவிர அவர்கள் அதை செய்யவில்லை

பொற்கொல்லர், தளபதி, வியாபாரி என எல்லாவற்றுக்கும் படிப்பு இருந்தது, பிராமணன் அதை படித்தானா?

அவன் தன் எல்லையான வேத மந்திர ஆலய பணிகளில் எல்லை கட்டி நின்றான், மறுக்க முடியுமா?

அவன் அதிகாலையில் எழ வேண்டும், நீராடி தெய்வத்தை தொழவேண்டும், முன்னோர்கள் சொன்ன ஏகபட்ட மந்திர இதர உச்சாடனைகளை மனனம் செய்ய வேண்டும், அதை பரம்பரை பரம்பரையாக காக்க வேண்டும்

ஆம் ஓலைசுவடி ஒரு கட்டத்துக்கு மேல் கொள்ளாது, கொண்டாலும் செல்லரித்தால் நாசம். அட நூல் என்றால் எரிந்தால் நாசம், இன்றைய டிஜிட்டல் மீடியா என்றாலும் ஒரே ஒரு லேசர் கதிரில் நாசம்

பின் எங்கிருந்து மந்திரங்களை மீட்டெடுப்பது?

இதனால் பாராயணம் செய்வது ஒன்றே வழி என அந்த கூட்டம் மனப்பாடமாய் படித்தது, வேறு வேலைக்கு சென்றால் அதை வழிவழியாக தொடர்வது யார்? அந்த வேலையில் கவனம் சென்றால் வேதத்தை காத்து வருவது யார்?

பிராமணன் ஒரு காலமும் அன்று சுகவாழ்வு வாழவில்லை, அரசனுக்கு, நிலம் கொண்டிருந்த நிலக்கிழாருக்கு , வியாபாரிகளுக்கு, உழைக்கும் மக்களுக்காக பிரார்தித்தும் ஆலோசனைகளும் சொல்லி, கடவுள்பால் அவர்களை பிடித்து வைத்த ஒரு வேலைக்காரன்

அவனுக்கு சொத்து இல்லை, அதிகாரமில்லை, கைபொருளுமில்லை. தானம் எனும் ஒரே ஒரு விஷயத்தால் வாழ்ந்தவன் அவன்

அவனை ஆதரிக்க வேண்டியது சமூக கடமையாய் இருந்தது. ஆம் அன்று அவனுக்கு சம்பாதிக்க தெரியாது, சண்டை தெரியாது, ஏமாற்ற தெரியாது

இதனால் பசுமாடும் அவனும் ஒரே வரிசையில் வைக்கபட்டிருந்தார்கள். அவர்களை சமூகமே காக்க வேண்டும் என்றும், இடையறா கடவுள்பணி செய்யும் அவர்கள், நமக்காக கடவுளிடம் மன்றாடும் அவர்களை நாம் காக்க வேண்டும் எனும் அக்கறையே இருந்தது

மந்திர முழக்கங்களும் யாகங்களும் நாடு வாழவே உச்சரிக்கபட்டன, கோவிலுக்கு சென்றால் கூட அர்ச்சகர் அவனுக்காகவே மந்திரம் முழங்கினார், அதற்கான ஒரு சிறிய கூலி அல்லது அன்பளிப்பு வழங்கபட்டது

காரணம் பிராமணனுக்கு வேறு வேலை தெரியாது

எந்த பிராமணனும் தனக்காக மந்திரம் சொல்லமுடியாது , மந்திரத்தாலோ இறை சக்தியாலோ தன்னை வளர்க்க முடியாது, அரசனின் ஜாதகத்தை கணிக்கும் அவனால் அரச பதவியில் அமரமுடியாது

அவன் வாழ்வு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்த ஒரு தன்னலமற்ற வாழ்வு

வேதம் என்பதே விளக்கு, வேதம் என்பதே ஒளி , வேதம் சொல்லபடும் நாடு செழிக்கும்

பாரதகண்டம் அப்படி இருந்தது, இந்த கண்டத்தின் எல்லா பாகங்களிலும் வேதங்கள் முழங்க முழங்க இந்நாடு செல்வ செழிப்பில் மின்னியது, இது வரலாறு

இதனால் இந்த கண்டத்தில் பிராமணருக்கு தனி மரியாதை இருந்தது, அவர்கள் இக்கண்டத்தின் பொது சொத்து ஆனார்கள், அவர்களை கொல்லல் பாவம் என்றும், போர்காலங்களில் கூட அவர்களை தொட கூடாது என்றும் உத்தரவுகள் இருந்தன‌

அந்த செழிப்பில்தான் அலெக்ஸாண்டர் முதல் பிரிட்டிஷார் வரை வந்தனர், வந்து கொள்ளை அடிக்க முயன்றனர், அரசர்களின் வீழ்ச்சியில் இத்தேசம் கொள்ளைகாடு ஆயிற்று

அரசர்கள் வீழ பிராமணரை ஆதரிக்கும் வழக்கமும் குறைந்தது, ஆட்சியாளர்கள் மாற பிராமண இனம் தத்தளித்தது.

தன்னை காக்க அதற்கு வேறுவழி தெரியவில்லை, அது வேத பாராணயம் பூஜை இன்னபிற விதிகள் கடமைகளிலிருந்து விலகி கணக்கெழுதுதல் குறிப்பெழுதுதல் என திசைமாறிற்று, ஜோதிடம் போன்றவை விற்பனையானது இப்படித்தான்

இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சிகளில் இங்கு ஆலயங்கள் சீரழிந்தன பிராமண இனமும் மந்திரம் சொல்லுதலை விட்டுவிட்டு இதர மொழிகளை படிப்பதில் கவனம் செலுத்திற்று

அது அப்பொழுது அவர்களுக்கு கைகொடுத்தது, ஆனாலும் வழிவழியாக காத்துவரும் மரபினை அந்த வேத மூலங்களை அவர்கள் செய்ய தயங்கவில்லை

அவர்கள் இறைவனில் கலந்து மந்திரம் சொன்னவர்கள், மனசாட்சிக்கு அஞ்சி சராசரி மனிதனாய் இல்லாமல் தவ வாழ்வில் நின்றவர்கள் என்பதால் ஒரு நேர்மை அவர்களிடம் இருந்தது

அதை சரியாக பயன்படுத்தினான் வெள்ளையன், அவன் அதை அடையாளம் அவர்களிடம் பெரும் பொறுப்பை கொடுத்தான், தான் செல்லும் இடமெல்லாம் அழைத்தும் சென்றான்

அவர்களிடம் இருந்த நேர்மை அவனை கவர்ந்தது, இன்றுவரை ஐரோப்பா அமெரிக்காவில் பிராமணர் பெரும் இடத்தில் இருப்பது அப்படித்தான்

பிராமண இனத்தின்மேல் கடும் குற்றம் சாட்டும் விஷயம் எப்பொழுது தொடங்கியது?

அதை தொடங்கி வைத்தவர்கள் மிஷனரிகள், பிராமண இனம் இந்துமதத்தை தாங்கி நிற்பதை அவர்களால் பொறுக்கமுடியவில்லை, காசியினை அழித்தால் இந்துமதத்தை அழிக்கலாம் என திட்டமிட்ட அவுரங்கசீப் போல, பிராமணர்களை ஒழித்தால் இந்துமதத்தை ஒழிக்கலாம் என திட்டமிட்டவர்கள் அவர்களே

இதனால்தான் அரசருக்கு நிகரான செட்டிகள், பெரும் தனவான்களான முதலியார்கள் இன்னும் பெரும் வாழ்வு வாழ்ந்த ஜமீன் கூட்டத்தை அரசிடம் அற்ப சம்பளம் வாங்கிய பிராமணனை குறிவைக்கும் திட்டம் வகுக்கபட்டது

நீதிகட்சி அதை தொடங்கியது

நீதிகட்சி போராட்டம் நடத்தியது நமக்கு தெரியுமே தவிர, மேல்நாட்டில் அவர்கள் செய்த வியாபாரமோ அதற்கு மிஷினரிகள் செய்த உதவியோ பலருக்கு தெரியாது

அப்பொழுது தொடங்கபட்டது தென்னக பிராமண எதிர்ப்பும், திராவிட சித்தாந்தமும்

வெள்ளையன் பெரும் திட்டங்களை நீண்டகால நோக்கில் வகுப்பவன், இன்று ஹாங்காங் போல, தைவான் போல இந்தியாவினை பிளந்து போடும் திட்டம் அவனுக்கு இருந்தது

தென்னிந்தியாவினை பிரித்து போட அவன் திராவிட சித்தாந்தத்துக்கு தீனியிட்டான்

மிகபெரும் பொருளாதார கேந்திரமான பம்பாயினையும் அதன் பகுதிகளை வளைக்க மகராஷ்டிரத்திலும் ஒருவரை கண்டறிந்தான்

இவர்கள் வைக்கும் தீ பற்றி எரியும் அதில் தேசம் சிதறும் என கனவு கண்டான்

இப்படி எல்லோரும் வைத்த தீதான் பிராமண எதிர்ப்பு, பிராமணனை எதிர்க்க எதிர்க்க இந்துமதம் புறக்கணிக்கபடும், மந்தைகள் சிதறும் அதை அள்ளிகொண்டு செல்லலாம் என்பது மிஷனரி கணக்கு

அதில் தனிநாடு கண்டால் தனக்கு லாபம் என்பது பிரிட்டிஷ்காரன் கணக்கு

எல்லாமே அரசியல் அன்றி வேறல்ல‌

எம்மால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லமுடியும்

இங்கு வேதங்கள் வாழ வாழ இந்திய கண்டம் வாழ்ந்தது, அது உலகின் மிகபெரும் பணக்கார நாடாய் மின்னியது

வேதம் சரிய சரிய அது தரித்திரதேசமானது, ஆனால் பிராமணன் சுதந்திரமாக இயங்கிய நாடுகள் வளம்பெற்றன, பிராமணன் கால்வைத்த இடங்களும் ஆசிபெற்றன‌

அவனை விரட்டிய தேசம் கடும் சீரழிவினை சந்தித்தது

இங்கு வேதங்கள் முழக்கம் எவ்வளவு அவசியம், ஒரு இனம் வேறு வேலைக்கு செல்லாமல் அதை காத்துவருதலும், பொது நலத்துக்காக தனித்திருந்து பிரார்தித்து வருதலும் எவ்வளவு அவசியம் என்பதை இப்பொழுது உலகம் புரிந்து கொண்டது

இன்னும் தெளிவாக புரியவேண்டுமானால் பிராமணருக்கு தனியாக ஒரு தேசம், மிக சிறிய தேசம் அமைத்து கொடுங்கள், அது இஸ்ரேலை விட உலகம் வியக்கும் தேசமாக அமையும், அது சத்தியம்

இங்கு தவறாக புரிந்து கொள்ளபட்ட ஏகபட்ட விஷயமும், கொடுமையாக திரிக்கபட்ட வரலாறும் பிராமணனுடையது

இங்கே தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் பிராமணர்கள் இருப்பதில்லை, கிராம ஆலயங்களிலும் ஆதீனங்களிலும் இன்னும் பல இடங்களிலும் எல்லா சாதியும் அர்ச்சகராக எக்காலமும் உண்டு

ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஆலயங்களில்தான் சில விதிகள் உண்டு, அது இந்து பாரம்பரியம் அங்கு அரசின் சட்டங்கள் செல்லாது என கருணாநிதி அரசுக்கே நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காலங்களெல்லாம் உண்டு

இனி முக ஸ்டாலினும் அதே கண்டனத்தை பெறுவார்

உண்மையில் ஒரு வைராக்கியமாக நின்று, வருமானமில்லாமல் , தட்டும் தட்சனையுமாக, ஹிந்து தர்மத்துக்காக ஆகமவிதி ஆலயங்களில் வறுமையில் போராடி ஹிந்து தர்மத்தை காக்கின்றார் பிராமண குருக்கள்

கோடான கோடிகளை வைத்திருக்கும் திமுகவினரை போல் அவர்களுக்கு செல்வமில்லை, வாரிசுகளை கொண்டுவரும் அளவு அத்தொழில் வருமானமுமில்லை

ஒரு பக்கம் இட ஒதுக்கீடு என அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கபடுவதும் இன்னொரு பக்கம் மிக சில ஆகம கோவில்களிலும் அவர்களை விரட்டுவோம் என்பதும் அநீதியின் உச்சம்

அந்த இனம் வேதம் காக்க, ஆலயங்களில் மந்திரம் முழங்க உருவான இனம், ஆலயமில்லை என்றால் அவர்கள் இங்கு வாழும் அவசியமே இல்லை

விவசாயி, மீனவண் என பலரின் துயர் என்றால் துடிக்கும் அரசு பிராமணரின் துயரை வளர்த்து ரசிப்பது அரக்கதனம்

அவர்கள் இறைவன் அடியார்கள், இறைவனே வந்து அவர்களுக்காக “தில்லைவாழ் அந்தணருக்கும் அடியேன்” என்பது முதல் எத்தனையோ இடங்களில் அவர்கள் தன் அடியார்கள் என சொன்ன பூமி இது

அந்த ஆகம விதிகள் ஆலயத்தினை அப்படியே விடுவதுதான் சரி, சட்டமும் அதைத்தான் சொல்கின்றது

தாஜ்மஹால் அருகே பல போலி தாஜ்மகாலை கட்டினால் உண்மை தாஜ்மஹால் அடையாளமின்றி அழிந்துவிடும் என்பது போல எல்லோரையும் அர்ச்சகராக்கி உள்ளே நுழைத்து குழப்பினால் ஹிந்து தர்மம் அழியும் என கணக்கிடுகின்றது இந்த அரசு

ஹிந்து தர்மம் என்றால் என்ன?

அது தன் வரலாற்றில் புத்தம்,சமணம், இஸ்லாம் , கிறிஸ்தவம் என எத்தனையோ சவால்களை மீட்டெடுத்த மதம்

புத்த காலத்தை ஒரு இளம்துறவி சங்கரர் ஒழித்து இந்துமதம் காத்தார்

சமணம் ஒரு பாலகன் ஞான சம்பந்தனாலும் ஒரு கிழவன் அப்பர் சாமிகளாலும் ஒழிக்கபட்டது

ஆப்கானியர் முழுவேகத்துடன் வந்து ஆலயங்களை பாழ்படுத்தியபொழுது நாயக்க அரசும், வீர சிவாஜியும் சிங்கமென எழும்பினர்

மிஷனரிகள் ஆட்சியில் ஓசையின்றி இந்து துவேஷம் நடந்தபொழுது எத்தனையோ இந்து சபைகளும் ஆதீனங்களும் மடங்களும் சவால் விட்டு எழுந்து இந்துமதம் காத்தன‌

எல்லாம் எரிந்த காடு ஒரு மழையில் துளிர்ப்பது போல தன்னை ஒன்றுமில்லா சூனியத்தில் இருந்தும் புதிப்பித்து கொள்ளும் சக்தி கொண்டது இந்துமதம்

அதனால்தான் எகிப்து, ரோம், அரேபியா என பண்டைய பெருமைகளெல்லாம் அடையாளமெல்லாம் அழிந்து சமாதியாகிவிட்ட நிலையில் பாரதமோ ராமர்கோவில் வரை மீட்டெடுத்து வெற்றி நடையிடுகின்றது

இந்து தர்மம் அந்த அதிசயத்தை செய்யும், அது ஒன்றுக்கே அது சாத்தியம்

தர்மத்தின் மேல் கட்டபட்ட அந்த இரும்பு கோட்டையினை, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் மலையினை வெறும் 5 ஆண்டு முதல்வராக அதுவும் தமிழகம் எனும் சிறுமாநிலத்தின் தற்காலிக முதல்வராக இருக்கும் திமுக அரசு மோதினால் நிச்சயம் அழிவது பிராமண இனமாகவோ இந்து தர்மமாகவோ இருக்காது

By
Stanley Rajan

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.