இவர் ஒரு கிறித்துவர்… இந்தளவுக்கு விஞ்ஞானத்தையும்.. நமது தர்மத்தையும் இனைத்து ரத்தினச்சுருக்குமாக யாரும் சொல்லமுடியாது.. இந்தப்பதிவை உங்கள் பிள்ளைகளுக்கு புரியவையுங்கள்.. அவர்கள் எக்காலத்திலும் மதமாறமாட்டார்கள்…

கூடவே டான் ப்ரவுனின் டாவின்சிகோட் உள்பட அத்தனை நாவல்களையும் படிக்க தூண்டுங்கள்.. இந்துமதத்தின் அருமை தெள்ளத்தெளிவாகப்புரியும்)

ஐரோப்பாதான் நவீன விஞ்ஞானத்தை உலகிற்கு கொடுத்தது சந்தேகமில்லை, ஆனால் ஆழ கவனியுங்கள் அந்த விஞ்ஞானிகள் எல்லாம் கிறிஸ்தவமதத்தின் மேல் அபிமானம் இல்லாதாராகவே இருப்பார்கள்

காரணம் பைபிள் சொல்வதென்ன? கடவுள் உலகை படைத்தார் மனிதனை படைத்தார், ஒழுங்காக அவருக்கு பயந்து வாழ்ந்து பரலோகம் போ, வாழும் நாளெல்லாம் அவரை வணங்கிகொண்டே இரு என முடித்துவிடும்

அதை மீறுபவர்கள் மத விரோதிகள்

கோப்பர் நிக்கஸ் முதல் கலிலியோ புரூனோ என யாரும் அதற்கு தப்பவில்லை, நியூட்டன் கிறிஸ்தவ மதத்தை ரசிக்கவில்லை, டார்வினும், ஐன்ஸ்ட்டீனும் ஓப்பன் ஹைமரும் யூதராயினும் யூதமத பக்கம் செல்லவில்லை, கிறிஸ்தவரான ஹாக்கின்ஸும் அப்படியே

மதம் எனும் வட்டத்தில் சிக்கிகொண்டால் அறிவு வளராது, செக்குமாடு போல் ஆகிவிடும் வாழ்க்கை என்பது அவர்கள் நம்பிக்கை

ஆம் இந்துமதமும் எந்த நிபந்தனையோ அச்சுறுத்தலோ இல்லாமல் இயற்கை ரகசியங்களை தன்னுள்ளே வைத்து அதன் இயல்பிலே இருந்தது, அதை எடுக்கத்தான் யாருமில்லை

ஆனால் அவர்கள் இந்துமதத்தை ரசித்தனர் அவர்களின் விஞ்ஞான தேடலுக்கு எல்லாம் இந்துமதம் விடை அளிப்பதாக கொண்டாடினர்

ஒப்பன் ஹைமர் அதை அணுகுண்டு சோதனையின் பொழுதுசொன்னான், கீதையில் கண்ணன் சொன்ன பிரமாண்டத்தை கண்டேன் என்றான்

சூரியனின் 7 குதிரை கதையின 7 நிறமாக பிரித்தும் அதில் நீல வண்ணம் சிதறடிக்கபடும் அதில் வானமும் கடலும் நீலமாக தெரியும் என்பதை காட்டினார் சர் சிவி ராமன்

ஆம் கண்ணனும் ராமனும் நீலம் என கொண்டாடபடும் தத்துவம் அதுவே

இந்து மதத்தின் விமான சாஸ்திராவினை அக்குவேறு ஆணிவேறாக அலசியது ஹிட்லரின் கூட்டம், அதன் விளைவே அவன் கண்ட சக்திமிக்க ராணுவம்

சிஸ்ருதரின் மருத்துவகுறிப்பில் பிறந்ததே நவீன மருத்துவம்

ஞானமும் அறிவும் விஞ்ஞானமும் கணிதமும் சோதிடமும் இங்கிருந்துதான் அங்கு சென்றது

ஐன்ஸ்டீனின் சார்பியல் மற்றும் ஒளிகொள்கை அப்படியே இந்து புராணங்களின் சம்பவங்களோடு பொருந்திற்று

தன் ஆராய்ச்சியின் உச்சியில் சொன்னான் ஐன்ஸ்டீன் “ஒளிவேகத்தினை விட‌ ஒரு வாகனம் செய்து அதில் மனிதன் பயணிப்பானால் அவன் புவி ஈர்ப்பு விசையினை விட்டு விண்வெளிக்கு சுற்றிவிட்டு திரும்புவானால் ஆயிரம் ஆண்டு ஆனாலும் அவன் அப்படியே இருப்பான்”

அவனின் பொருள் திசை காலம் எனவும் இன்னும் பல புரியாத தத்துவங்களுடனும் அவன் சொல்ல வந்த உண்மை இதுவே

இதை இந்து புராணங்கள் தெளிவாக சொல்கின்றன , சொர்க்கத்திற்கு சென்ற மன்னன் ஒருவன் சில நாட்கள் கழித்து பூமி திரும்பியபொழுது தன் 100ம் வாரிசு ஆள்வதை காண்கின்றான்

கண்ணன் கதையில் பலராமனின் மனைவி கதையும் இதுவே, அது மகா ஆச்சரியமாக ஐன்ஸ்டீனின் தத்துவத்தை சொன்னது

இன்று கருந்துளையினை பார்த்துவிட்டோம் என உலகம் கொண்டாடும் பொழுது, முதன் முதலில் கருந்துளை பற்றி சொன்னது நமது நாட்டின் சந்திரசேகர் என்பவரே

அவர் சர்சிவி ராமனுக்கு அண்ணன் மகன், அவர்தான் முதலில் கருந்துளை உருவாகும் விதத்தை சொல்லி நோபல் பரிசும் வென்றார்

(சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவனையின் தூணான அந்த டாக்டர் சாந்தா இவருக்கு உறவு என்பார்கள்)

மற்றவர்கள் யூகத்தில் சொன்னார்களே அன்றி தீர்க்கமாக சொல்லவில்லை முதலில் சொன்னது இவரே

வான்வெளி எல்லை, கருந்துளை உருவாகுதல் என பல விளக்கங்களை அவர்தான் உலகிற்கு கொடுத்தார்

விஞ்ஞானம் இருக்கட்டும், சரி , கருந்துளை என்பதன் வான்வெளி பயன் என்ன? சும்மா எதுவும் உலகில் படைக்க படாது அல்லவா? ஏன் கருந்துளை உருவாக வேண்டும்?

அங்குதான் நிற்கின்றது இந்துமதம்

பிரம்மாவின் கதையினை நீங்கள் கூர்ந்து படித்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும், அதாவது ஒரு தங்க‌ முட்டையிலிருந்து உலகம் தோன்றிற்று என சொல்லும் அம்மதம்

பிரம்மனின் இன்னொரு பெயர் ஏதோ ஒரு கர்பன் என்பதும் அவன் வெடித்து சிதறினான் என்பதும் புராணம் சொல்வது, பிங்பாங் தியரி என அதை இன்றைய விஞ்ஞானம் சொல்லிற்று

அதாவது அண்டம் என்பது நீள்வட்டம் என்பதை சொல்லிற்று, அது வேகமாக விரிவடையும் என்பதையும் பின் சுருங்கும் என்பதையும் அதுவே சொல்லிற்று

இன்று விஞ்ஞானமும் அதைஒப்புகொள்கின்றது அண்டம் என்பது விரிவடைகின்றது என சொன்னவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நோபல் கிடைத்தது

அண்டம் விரிந்து கொண்டே சென்றால் என்னாகும் எல்லாம் அப்படியே சென்றுவிடாதா?

இதில்தான் வருகின்றது கருந்துளைகள் , அவை ஒரு ஈர்ப்பு விசையினை சமன்படுத்தி அண்டத்தின் விரிவை கட்டுபடுத்துகின்றன‌

விரிவடையும் அண்டம் ஒருநாள் சுருங்கும் அதற்கு கரும்துளைகள் செவ்வனே உதவும்

அதாவது அண்டம் விரிந்து சுருங்கி பின் விரிந்து மறுபடி சுருங்கி பல பிறப்பெடுக்கும், விஞ்ஞானம் அதைத்தான் சொல்கின்றது

இது ஒரு யுகப்பிறப்பு அதாவது பிரம்மனுக்கான வயது என்கின்றது இந்துமதம்

கருந்துளையினை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்துமதத்தில் சரணடைந்தனர் அதில் ஏகபட்ட விஷயங்கள் அவர்களுக்கு கிடைத்தன‌

நம்புவதற்கு கடினமானதும் அறிந்துகொள்ள சிரமமானதுமான விஞ்ஞான தத்துவங்களை இந்துக்கள் புராண கதை என சொல்லிவைத்திருப்பதை கண்டு அதிசயத்தனர்

இந்துமதமே அறிவுகளின் தாய் என்றும் விஞ்ஞானம் ஒளிந்திருக்கும் மதம் என்பதை ஒப்புகொண்டனர்

அண்ட வடிவமும் கருந்துளை அமைப்பும் கீதையின் 11ம் அத்தியாத்தில் தெரிவதாக அன்றே சொன்னார்கள் மேல்நாட்டு விஞ்ஞானிகள்

இந்திய ஞான நூல்களிலும் உபநிஷங்களிலும் உள்ள கருத்துக்களின் விஞ்ஞான வடிவம் பற்றி விவேகானந்தர் இப்படி சொல்கின்றார்

“விஞ்ஞானம் சொல்லும் ஆற்றல் கருத்து, நமது மிகப் பழமையான சம்மிதைகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியின் ஈர்ப்பு சக்தி, கிரகங்களின் இழுக்கும் சக்தி, அல்லது அதற்கு எதிரிடையாக விளங்கும் சக்தி, உஷ்ணம், மின்சாரம் அல்லது காந்தம் என்று பலவாறாகச் சொல்லப்படும் சக்திகள் அனைத்தும் அந்த அடிப்படையான சக்தியின் வேறுபாடுகளேயொழிய வேறல்ல.

பிராணன் என்பது என்ன? பிராணன் என்பது ஸ்பந்தனம், ஒரு வித வேகம் (Vibration). பிரபஞ்சமனைத்தும் அடங்கி முன்னிருந்த நிலையை அடையும்போது, இந்த அளவற்ற சக்தி என்னவாகிறது? அது மறைந்து அல்லது தீர்ந்து விடுகிறதென்று நம் சாஸ்திரங்கள் உரைக்கின்றனவா?

அவை அங்ஙனம் உரைப்பதில்லை; ஏனெனில் அவை தீர்ந்து விட்டால், இப்பிரபஞ்சம் மறுபடியும் தோன்றுவது எங்கனம் சாத்தியமாகும்?

சிருஷ்டியென்பது சமுத்திரத்தில் அலைகள் தோன்றி மறைதல் போல், தோன்றி மறைந்து கொண்டேயிருக்கிறது. ஒரு கற்பத்திற்குப் பிறகு பிரபஞ்சம் அனைத்தும் சூட்சுமமாகி சிருஷ்டிக்கு முன்னிருந்த நிலைமையை அடைக்கின்றன.

மறுபடியும் சிருஷ்டி ஆரம்பமாகும் வரை அவை அவ்விதமேயிருக்கின்றன. இந்நிலையில் உலகில் காணப்படும் சக்திகளும், இச்சக்திகள் அனைத்திற்கும் அடிப்படையாகவிருக்கும் பிராணன் என்ற மகத்தான சக்தியும் என்னவாகின்றன?

பிராணன் ஆதிப்பிராணனுடன் ஐக்கியமாகி விடுகிறது. இந்நிலையில் அதன் வேகம் குறைந்து அசைவற்றிருக்கிறது. இதைத்தான் வேதத்தில் ‘அது அசைவற்றிருந்தது; ஆனாலும் தன்னுள்ளே மகத்தான சக்தியை உடைத்தாயிருந்தது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

உபநிடதங்களில் பலவிடயங்களில் பரிபாஷைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவைகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக விருக்கிறது”

ஆம் இந்துமதத்தின் அடியாழம் வரை அலஞ்சிய அந்த ஞானமகன் இப்படித்தான் சொன்னான்

இருந்து பாருங்கள், ஒரு காலத்தில் வான்வெளி ஆராய்ச்சியும் அதன் அமைப்பும் தத்துவமும் இயங்கும் முறையும் இந்து மதத்திடமே சரணடையும்

இப்பொழுது அப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றது

ஐரோப்பியர் விண்வெளிக்கு சென்று 9 கிரகம் கண்டுபிடித்து அவைகளின் சுற்றுபாதையினை கணக்கெடுத்தெதெல்லாம் இக்காலம்

70 அண்டுகளுக்கு முன்பு

ஆனால் பல லட்சம் ஆண்டுக்கு முன்பே அக்கிரகங்கள் அதை தாண்டிய நட்சத்திர மண்டலம் அது வரும் கணக்கீடுகள் எல்லாம் இந்துக்கள் கையில் துல்லியமாக இருந்தன‌

வான சாஸ்திரத்தை இந்துமதம் சொன்ன அளவு இன்னொரு மதம் சொன்னதே இல்லை

உலகில் எல்லா ரகசியங்களையும் தன்னுள் கொண்டு எல்லாவற்றிற்கும் விளக்கமும் உண்மையும் சொல்லும் மதம் இந்து மதம் போல இன்னொன்று உலகில் இல்லை

அந்த மதத்தை நாம் வியப்போடு பார்க்கவும் அதன் மேல் பெரும் மரியாதை ஏற்படவும் இதுதான் காரணம்.இங்கு சொல்லபடாத எதையும் விஞ்ஞானம் ஒரு போதும் சொல்லபோவதில்லை, ஒருவேளை சொன்னால் நன்றாக தேடிபாருங்கள் அது இந்துமதம் மிக அசால்ட்டாக என்றோ சொல்லி சென்ற விஷயமாகவே இருக்கும்.

-By
Stanly Rajan.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.