உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) ‘பிரச்சினையைக் குறைப்பது’ குறித்து சீனா ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் அதாவது, பாங்காங் த்சோவின் வடக்குக் கரையில் உள்ள விரல் 8 க்குச் செல்ல சீனா தயாராக உள்ளது, ஆனால் இதற்கு இந்தியா விரல் 4 இலிருந்து விரல்கள் 2 மற்றும் 3 க்கு இடையில் செல்ல வேண்டும்.

ஆனால் இது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டமா? இல்லை. இந்தியா ஏன் தனது படைகளை பின்னுக்கு நகர்த்த வேண்டும்? பல காரணங்களுக்காக இது மிகவும் கடினம். முதலாவதாக, இந்தியா தனது பிரதேசம் விரல் 8 வரை நீண்டுள்ளது என்று நம்புகிறது. ஆகவே, ஏற்கனவே இராணுவ தளம் இருக்கும் விரல் 3க்கு பின்னால் ஏன் திரும்ப வேண்டும்?

இரண்டாவதாக, இந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் சீனர்கள் விரல் 8 இல் இருந்தபோது இந்தியப் படையினருக்கு எந்த தடையும் இல்லை. எனவே, இப்போது ஏன் இருக்க வேண்டும்? அதற்கு பதிலாக, மே மாத தொடக்கத்தில் சீனர்கள் இருந்த இடத்திற்கு விரல் 8 க்கு செல்லலாம் என்று இந்தியா கூறியுள்ளது. அவர்கள் முதலில் நகர்ந்தனர். அவர்கள் முதலில் பின்வாங்க வேண்டும்.

மூன்றாவதாக, மிகப்பெரிய நம்பிக்கை பற்றாக்குறை உள்ளது. இந்தியா தனது படையினரை பின்னுக்கு நகர்த்தும்போது சீன இராணுவம் (பி.எல்.ஏ) விரல் 8 இல் தங்குமா? இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒரு வட கரை -தென் கரை தொகுப்பு ஒப்பந்தம் பற்றி சில பேச்சுக்கள் உள்ளன. அதாவது, ஸ்பாங்கூர் முதல் ரிச்சின் லா வரை தென் கரையில் முக்கியத்துவம் வாய்ந்த போஸ்ட்களை இந்திய ராணுவம் வைத்திருப்பது குறித்து சீனா கவலைப்படுவதால் இரு கரைகளிலிருந்தும் பொதுவாக திரும்பப் பெற வேண்டும்.

ஆகஸ்டின் பிற்பகுதியில் இந்தியா, தென் கரையில் தனது நிலைகளை வலுப்படுத்தியது சீனர்களை கவலையடையச் செய்துள்ளது, இது இருட்டில் இந்திய நிலைகளுக்கு சீனப் படைகள் ஊர்ந்து செல்வதற்கும் காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் வழிவகுத்தது. இது போல் நான்கு முறை நடந்துள்ளது.

இது சீனா அசிங்கப்படாமல் பிரச்சினையை முடிக்கும் ஒரு வழியாக இருக்கலாம், ஆனால் கால்வானில் நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சீனர்கள் அசிங்கப்படாமல் செல்லும் ஒரு வாய்ப்பை வழங்க இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு சீனா இருந்த நிலைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதே அது.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.