வழக்கமாக செல்லும் நூலகத்தில் எல்லாம் திப்பு சுல்தான் குறித்து நிறைய நூல்கள் இருக்கின்றன.அனைத்தும் 1.மாவீரன் திப்பு 2.சம உரிமை காவலன் திப்பு 3.மனித நேயத்தின் சிகரம் திப்பு, ஏன் 4.மதநேய திப்பு என்றெல்லாம் கூட இருக்கிறது .

அவை மலிவு விலை பதிப்பாகவும், சில அமைதி மார்க்க டிரஸ்ட்டின் பொருளாதார உதவியால் வாங்க பட்டதாகவும் இருக்கிறது .
திரு சா பாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தை எடுத்துவந்து படித்துப் பார்த்தேன்.


ஒரு சரித்திர நூலுக்கான எந்தவித லட்சணமும் இல்லாமல் ஒரே வசனமயம் .வழக்கமாக இருக்க வேண்டிய ரெபெரென்ஸ் பிபிலோக்ராபி எதுவும் இல்லை ..

ராஜிவ் காந்தி சொன்னதை எல்லாம் மேற்கோள் காட்டி இருக்கிறார்கள்.
சோனியாவை போன்றவராம் திப்பு ..
மராட்டியர்களைவிட வீரராம்
வருடக்குறிப்பில் 1979 என்றெல்லாம் இருக்கிறது .
அச்சு பிழையாக இருந்தாலும் யாராவது சரி பார்த்திருக்க வேண்டாமா?

சாமர்த்தியமாக திப்புவின்
தஞ்சாவூர் அராஜகம்
கூர்க் கொலைகள்
மலபார் இனப்படுகொலை
மதமாற்ற கொலைகள்
ஒரே நாளில் 3000 அந்தணர்களை கொன்றது

இதையெல்லாம் ஒற்றை வரிகளில் முடித்துக்கொண்டுள்ளார் .
மூவேந்தர்கள் வீரர்களாக இருந்தார்களாம். ஆனால் ஆரியர்கள் வந்து அவர்களை யாகம் செய்ய சொல்லி கெடுத்தார்களாம்.

எனக்கு தோன்றும் கேள்விகள் :

  • பிட் நோட்டீசை சேர்த்து பைண்ட் செய்தது போன்ற இதை எல்லாம் ஒரு சரித்திர ஆவண நூல் என்று அரசாங்க நூலகத்தில் வைக்கலாமா?
  • யார் வாங்கிக்கொடுத்தாலும் புத்தகத்தை நூலகத்தில் வைத்து விடுவீர்களா?
  • அந்த பதிப்பகத்தாருக்கு- இதன் சாரமாக ஒரு கடிதம் வைத்துள்ளேன் .முடிந்தால் அந்த சா பாலக்ரிஷ்ணனிடம் கொடுங்கள்..பதில் தரட்டும்
  • கடைசியாக … ஏன் வலது சாரி புத்தகங்கள் நூலகங்களில் இல்லை?, யாரும் எழுதவில்லையா? இதற்காக எதாவது செய்யவேண்டாமா?” என திரு.சக்திவேல் R குமார் அவர்கள் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

பல கோடி செலவில் மணிமண்டபமே அமைக்கப்பட்டிருக்கும் திப்பு சுல்தானின் புகைப்படத்தை பற்றி வலைத்தளங்களில் தேடும்போது மற்றொரு ஆச்சிரியம் காத்திருந்தது.

tamil.factcrescendo.com என்ற வலைத்தளம், திப்பு சுல்தானின் அசல் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதால். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்திருக்கிறது.

அந்த ஆய்வில், “முதலில் புகைப்படக் கருவி எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்று பார்த்தோம். 1800களின் தொடக்கத்தில் புகைப்பட கருவி கண்டுபிடிப்பு நடந்தது. 1826ம் ஆண்டு உலகின் முதல் புகைப்படம் பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிக்கோஃபோர் நிப்ஸால் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. திப்பு சுல்தான் இறந்து 27 ஆண்டுகள் கழித்துதான் உலகின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது, இது தான்சானியா நாட்டைச் சேர்ந்த அடிமைகள் வணிகர் ஒருவரின் புகைப்படம் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் ஹமீத் பின் முஹமது பின் ஜுமா பின் எனப்படும் திப்பு திப் என்று கூறப்பட்டு இருந்தது தெரியவந்ததாகவும்,

Image Source sciencesource.com

பின் பல அவர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகளில் ஒன்றான ரிவர்ஸ் இமேஜ் தேடல் முறையில், அவர்கள் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது, இது தான்சானியா நாட்டைச் சேர்ந்த அடிமைகள் வணிகர்(SLAVE TRADER) ஒருவரின் புகைப்படம் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் ஹமீத் பின் முஹமது பின் ஜுமா பின் எனப்படும் திப்பு திப் என்று கூறப்பட்டு இருக்கிறது” என tamil.factcrescendo.com மேற்கொண்ட முழு ஆய்வயும் பதிவிட்டு இருக்கிறார்கள்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.