வணங்கா முடியான ராணா பிரதாப் சித்தூர் தலைநகரமில்லாமலே நாட்டை ஆண்டுவந்தார்.

மொகலாய படைகள் பிரும்மபிரயத்தனம் செய்தும் அவரை அடக்கமுடியவில்லை.

மக்களும் அவரையே ராணாவாக கருதி வரி செலுத்திவந்தனர் .

படைகளுடன் காட்டில் வசித்துவந்த நேரத்தில் அவரது குழந்தைகளை கூடை களில் போட்டு மரத்தில் தொங்கவிட்டு இரவு நேரங்களில் பில்லு பழங்குடியினர் காத்தனர்.

பஞ்சணையில் உறங்கவேண்டிய அவரது குடும்பத்தினர் மலை மேடுகளில் கரடு முரடான தரையில் படுத்தனர். சில சமயம் உணவுகூட கிடைக்கவில்லை.

ஒருமுறை புல்லில் செய்த ஒரு ரொட்டியை உண்ணத்தொடங்கும்போது அவரது பெண்ணிடமிருந்த ரொட்டியை பெரிய காட்டு பூனைஓன்று பறித்துப்போக, அவரது பெண்ணின் அழுகை குரல் ராணாவை வாட்டியது .

ஒருவேகத்தில் அக்பருக்கு கடிதம் எழுதினார் ..நானும் ஒரு அரசன் அல்லவா? என் சிரமத்தை குறைக்க கூடாதா என்று.

கடிதத்தை படித்த அக்பர் துள்ளி குதித்தார்

ஆஹா பிரதாப் சமாதானத்துக்கு வருகிறார் என்று

பிகானீர் இளவரசனும் , கவிஞருமான பிருதிவிராஜிடம் கடித்தை காட்டினார்.

சுத்த ராஜபுத்திரனான பிருதிவிராஜ் அக்பரை வெறுத்தவன் .
ராணாவின் பக்தன் .
வேறு வழியில்லாமல் குடும்பத்தை பெண்களை காக்க அக்பரது அவையில் இருந்து வந்தான் .

கடிதத்தை படித்தவன் வேண்டுமென்றே ” மஹராஜ் இது ராணா எழுதியதாக தெரியவில்லை நான் வேண்டுமானால் பதில் கடிதம் எழுதி இது உண்மையா என்று கேட்கவா “
என்க, அக்பரும் சம்மதிக்க, பதில் கடிதம் இப்படி எழுதினான் :

” அக்பரது சந்தையில் எல்லாரும் வருகிறார்கள் விற்பனைக்கு
ஆனாலும் ராணாவை அவனால் வாங்கமுடிடியுமா என்ன?
ராஜபுத்திர மானம் ராணாவின் மீசையில் அல்லவா இருக்கிறது ?
ராணாவின் பெயரை சொல்லித்தானே நாங்களெல்லாம் மீசையை முறுக்கி
நான் ராஜபுத்திரன் என்று சொல்கிறோம் ..
அதற்க்கு பங்கம் வரலாமா?
ராணா வீழலாமா?
அவரது வீரம் ராஜபுதனத்தையே தலைமுறை தலைமுறையாக நிமிர்ந்து நிற்கவைப்பதல்லவா? “

படித்த ராணாவுக்கு உடல் சிலிர்க்கும் …

ஜெய் பவானி என்று எழுந்தவர் …

உடனைடியாக மறுபடியும் போருக்கு தயாராவார் .
.
” ஏகலிங்கன் ஆணையாக வெற்றி பெறுவேன்
மீசையை முறுக்கி ராஜபுத்திரன் என்று சொல்லுவேன்
இந்த கடிதம் 10000 வீரக்கள் என்னுடன் சேர்ந்தது போல பலம் தருகிறது “

என்று ராணா முழங்க ..

சரித்திரம் சொல்கிறது …..

-பக்கத்திலிருந்து பாமா என்ற மந்திரி தன பரம்பரை சொத்து முழுவதையும் விற்று 12000 வீரர்களுக்கு 5 வருடம் சம்பளம் கொடுக்க கூடிய செல்வத்தை வழங்க, மறுபடியும் வீறுகொண்டு எழுந்த ராஜபுத்திர படை சித்தூர் தவிர மொத்த ராஜபுதனத்தயும் அக்பரிடமிருந்து விடுவித்தது..-என்று .

இதுதான் ராஜபுத்திர மீசை கதை…

இது ஆண்மை சீசன் …

மீசை ஆண்மைக்கு அடையாளம் அல்லவா …
அதனாலும்
அந்த மீசை பதிவை நினைவுபடுத்தி ஒரு நண்பர் கேட்டதாலும்
இதோ எழுதி விட்டேன்.

படத்தில் நானும் ராணாவும் மீசையுடன்

Author: Sakthivel Rajkumar

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.