குத்தறிவாளர் என்பவர் அறிவுபூர்வமாக சிந்தித்து, ஆதாரங்களின் அடிப்படியில் செயல்படுவார், முடிவுகள் எடுப்பார் – உணர்ச்சிகள் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல்.  

‘கடவுள் இல்லை’, ‘மத சடங்குகள் மூடத்தனம்’, என்ற நம்பிக்கை கொண்டோர் நாத்திகர் – எந்த வித மத வேறுபாடும் இல்லாமல்.

பகுத்தறிவாளர்கள், நாத்திகராக அல்லது கடவுள் மறுப்பாளர்களாகவே இருப்பார்கள்.

இது எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பொருந்த வேண்டிய விளக்கங்களே…ஆனால்!

நாத்திகர் / பகுத்தறிவாளர் என்றால் என் நினைவுக்கு வருவது கருணாநிதியோ, வீரமணியோ அல்ல.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதி பாசு அவர்களிலே! அவர் ஒரு உன்னத நாத்திகர். தன் நம்பிக்கைகளை பற்றி பேச்சும் பொது,  “நான் நாத்திகன், மார்க்சிஸ்ட், கடவுளை நம்பவில்லை, மனிதநேயத்தை நம்புகிறேன்” என்றார் அவர்.

23 ஆண்டுகள் தொடந்து மேற்கு வங்க முதல்வராக இருந்த அவர்,  மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அறவே தவிர்த்தார், அது எந்த மதமாக இருந்தாலும்.

அன்னை தெரசா மீது மிகவும் அபிமானம்  கொண்டவர்;  ஆனாலும் …

அவரின் நாத்திக கொள்கை பிடிப்பு எவ்வளவு உறுதியானது என்பதை கீழ்கண்ட நிகழ்வுகள் மூலமாக கவனியுங்கள். 

அன்னை தெரசாவின் இறுதி ஊர்வலத்திற்கு முன் கொல்கொத்தா நேதாஜி உள்ளரங்கத்தில் மத பிராத்தனை நடந்தது. அதில் அப்போதைய அமெரிக்கா ஜனாதிபதியின் மனைவி ஹில்லாரி கிளிண்டன்,  அப்போதைய லோக்சபா எதிர் கட்சி தலைவர் வாஜ்பாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால், ஜோதி பாசு அந்த பிரார்த்தனையில் பங்குகொள்வதை தவிர்த்தார். அந்த பிராத்தனை முடியும் வரை காத்திருந்து, “இனி அன்னை தெரசாவின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும்”, என்ற அறிவிப்பு வந்த பின்னரே உள்ளே நுழைந்தார்!  

தன் மறைவுக்கு பின் மத சடங்குகள் செய்ய வேண்டாம் என்று  பணித்திருந்தார்.  தன் கண்களை தானம் செய்ய சொன்னார். தன் பூத உடலை எந்தவித அடக்கமும் செய்யாமல் மருத்துவ ஆராய்ச்சிக்காக  கொல்கொத்தாவில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு தானமாக கொடுக்கச்சொன்னார். அவ்வாறே அவர் உடல் தானமாக கொடுக்கப்பட்டது;  மிக முக்கியமாக, சமாதி ஏதும் கட்டப்படவில்லை!

கொள்கை பிடிப்பு என்றால் இதுவல்லவா பிடிப்பு?

ம்ம ஊர், கழக-பாணி-பகுத்தறிவுக்கு வருவோம்.

‘கடவுள் இல்லை’,  ‘மத சடங்குகள் மூடத்தனம்’,  என்ற கொள்கைகள் இந்து மதத்துக்கு மட்டுமே என்ற நிலை  எடுப்போம்.  அதேபோல பகுத்தறிவுக்கு ‘சமயத்துக்கு’ தகுந்தார்ப்போல விளக்கத்தை மாற்றி மாற்றி பேசுவோம்.

இந்து சமயத்தை இழிவு படுத்துவோம்;  கடவுள் சிலைகள்  வெறும் கல் என்று கூறி அவைகளை உடைப்போம் . ஆனால் நம் தலைவர்களுக்கு சிலை எடுப்போம்.

கடவுளுக்கு பாலபிஷேகம்,  பூ அலங்காரம்  மற்றும் உணவு, புத்தகம் படைப்பதை பகுத்தறிவிக்கு ஒவ்வாதது என்று ஏளனம் செய்வோம்.  வீண் செலவு என கண்டிப்போம்.

இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்லமாட்டோம்; ஆனால் மற்ற மத பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்தும் சொல்லுவோம், பங்கும் பெறுவோம்!  

எல்லையற்ற முரண்பாடு. 

ஜோதி பாசு போலவே கருணாநிதியும் நீண்ட நெடுங்காலம் அரசியலில் இருந்தவர், முதல்வராகவும் இருந்தவர்.

அவர் மறைந்த பொது, சிறப்புமிக்க மெரினா கடற்கரையில் அவருக்கு சமாதி எழுப்புவதே, பகுத்தறிவாளர் என்று தன்னை சொல்லிக்கொண்டவருக்கு செலுத்தும் மரியாதை என்று பகுத்தறிவுடன் முரண்பட்டனர், அவரை சார்ந்த ‘பகுத்தறிவாளர்கள்’. 

அந்த சமாதியை, அபரீத செலவில், நாள் தவறாமல் பூ அலங்காரம் செய்தனர்.

தேர்தல் வேட்பாளர் பட்டியலை சமாதியில் சமர்ப்பித்தனர்.

தினந்தோறும் முரசொலி பத்திரிகையை சமாதியில் பட்டுவாடா செய்தனர்.

உச்சகட்டமாக, அங்கே அவருக்கு பிடித்த தயிர் வடையை படைத்த போது,  கழக-பாணி-பகுத்தறிவு உலகறிய ஊசி போனது.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.